Saturday, 15 August 2015

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...

எப்பொழுதும் உனது படங்களை
ரசித்த நான்!
முப்பொழுதும் உன்
நினைவுகளை சுமந்த நான்
முதல் முறையாக எனது
படங்களை ரசிக்க தொடங்கிவிட்டேன்..!


இதிலென்ன ஆச்சரியம்
என்கிறாயா? ஆச்சரியம்தான்
உனை மறந்து எனை
நினைக்கத் தொடங்கிவிட்டேனே..!

இதென்றும் முடியாது என்ற  ஒன்றை
உனது ஒற்றை வார்த்தை
உடைத்தது சகியே..! அது சரி

நாம் வசித்த சிறுகிளை
உடைந்தது ஏன்?
அதிக அன்பின் கணத்தாலா?
அல்லது விதியின் பயனாலா? எதுவாயின்
நாம் யாரென்று
நமக்கு உணர்த்தியது காலம்..!



No comments:

Post a Comment