Sunday, 2 August 2015

பயணம்

ஒரு
நீண்ட பயணத்தில்
நீயும் நானும் சந்தித்தோம்..!

பல கதைகள் பேசினோம்
யார் கண் பட்டதோ
உனதிடம் வந்ததும்
உடனே இறங்கி சென்று விட்டாய்..!


உனது காலி இருக்கையைக் கண்டு
மனம் உடைந்து நானும்
இறங்கிவிட்டேன்..!

இணையாத இருகோடுகளாய்
நீயும் நானும் சிறு இடைவெளியில்
தனித்தனியாய் பயணிக்கிறோம்..!

நினைவுகள் மட்டும்
சிறு சிறு பெட்டிகளாய்
கடக் கடக் என்ற சத்தத்தோடு
ஏதோ ஒன்றை சுமந்து செல்கிறது..!

கூக்கூ.. கூக்கூ என்ற
சத்தம் கேட்கிறதா?
அது வேறொன்றுமில்லை
எனது அழுகுரல்தான்..!

இனி
உனக்கும் எனக்கும்
வெகுதூரம்..!


2 comments:

  1. கவித்துவமான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மொழி.வலை அவர்களே...

      Delete