அதை அப்படியே ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு அதன் உள்ளே சென்றேன். ஒரு பெரிய ஸ்டேடியம் போன்று அருமையாக இருந்து உள் அரங்கம். ஆனால் அவை யாருமற்று வெறுமையாக இருந்தது. அதைக் கடந்து சென்றேன். கோவில் தூண்கள் போன்று வரிசையாக இருந்தது கற்தூண்கள் அதை ரசித்தபடி கடக்கையில் சில காணக்கிடைக்காத கண்றாவி காட்சிகள் நம் கண்ணில் பட்டன ச்சே... என்று சற்று நகர்ந்து புல்வெளி பாதையில் நடந்தேன் அப்படியே என்னை மறந்தேன்.
எங்கும் பச்சை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை அப்படியே ஒரு க்ளிக்
சற்று நகர்ந்தேன் அந்த பசுமை நிறைந்த இடத்தில் சிவப்பு நிற இருக்கை என்னைக் கவர்ந்தது. அதையும் ஒரு க்ளிக் செய்தேன்.
பசுமை நிறைந்த பூங்காவில்
யாருமற்று தனித்து இருக்கிறது
ஒரு சிவப்பு நிற இருக்கை...😢
வெட்ட வெளியில் இருப்பதால்
இது தனித்திருக்கிறதோ என்னவோ...😊
அதையும் கடந்து சற்று முன்னோக்கி சென்றேன் காந்தி அருங்காட்சியகம் பளபளத்து எழுத்துக்கள். நான் காந்தியவாதியில்லை. ஆனாலும் உள்ளே என்ன இருக்கிறது கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வருவோமே என்று காலனிகளை வெளியே விட்டுவிட்டு உள்ளே சென்றேன் அங்கே யாருமே இல்லை. காந்தி மட்டும் கம்பை ஊன்றியபடி கம்பீரமாக நின்றார். அதன் கீழே மூன்று குரங்கு பொம்மைகள் காது, கண், வாயை மூடியபடி இருந்தது. அதற்கு பின் பல்லக்கு தூக்கியும் அதன் அருகே ஒரு ராட்டயும் இருந்தது அறையைச் சுற்றி அவரின் புகைப்படங்கள் பல கதைகள் சொன்னது. அதையும் ஒரு க்ளிக் செய்தேன்.
பிறகு அங்கிருந்து நகர்ந்து இராஜாஜி மண்டபத்திற்கு சென்றேன். அங்கே அவரின் புகைப்படங்கள் பல விஷயங்களை நமக்கு சொன்னது. அதைக் கடந்து சற்று நிமிர்ந்தேன் அழகிய புல்வெளியில் வாவை மரம் ஒன்று ஆலமரம்போல் பரந்து விரிந்து என்னை ஒரு போட்டோ எடேன் என்றது. அதையும் ஒரு க்ளிக் செய்தேன்.
அதன் பிறகு அப்படியே நடந்து தியாகிகள் மண்டபத்திற்கு வந்தேன். சரி யார் அந்த தியாகிகள் போய் பார்ப்போம் என்று உள்ளே சென்று பார்த்தேன் வரிசையாய் தியாகிகள் மாவட்ட வாரியாக பிரித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக பார்த்த போது தியாகிகள் பெயர்களோடு சாதி பெயர் ஒட்டிக்கொண்டு இருந்தது அது என்னை சற்று முகம் சுழிக்க செய்தது. ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த காந்தியடிகள், தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று சொன்ன காந்தியடிகள், பாமரன் என்று சட்டை போடுகிறானோ அன்றுதான் சட்டை போடுவேன் என்று சொன்ன காந்தியடிகள் மண்டபத்தில் சாதி பெயரோடு தியாகிகள் போட்டோ அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்கவில்லை அதற்குமேல் எதையும் பார்க்க விருப்பமில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டேன் நான் காந்தியவாதி அல்ல, இயற்கையின் அழகை காணவே அங்கே சென்றேன். நமது கொள்கை என்னவோ அதன்படி நமது செயல்கள் இருக்க வேண்டும் இல்லையா...? 😊
இங்கே யாரும் காந்தியும் இல்லை, புத்தனும் இல்லை, யேசுவும் இல்லை ஆனாலும் இவர்களை விமர்ச்சிக்கின்ற உரிமை நேர்மையான மனிதனுக்கு இருக்கிறது. சரி... சரி... காந்தி மண்டபத்தைச் சுற்றி பார்க்க வந்துவிட்டு எதையோ கதைத்து கொண்டு இருக்கிறேன்.... நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... 😂 😂 😂 😂 😂
சகோதரிக்கு
ReplyDeleteநானும் நிறைய வரப்போகிறது என்று ஆவுலுடன்
தொடர்ந்தேன். ஒரு வரியில் முடித்தாயிற்றே.
அழகு....
நன்று இணைப்பை எபவுட்டில்போட்டது.
அடடடா... ஏமாந்துவிட்டீர்களா சகோதரி இன்னொரு பதிவு போடுவோம். ஹா.. ஹா..
ReplyDelete