Saturday, 22 July 2017

தக்ஷ்சினசித்ரா

 
         சமீபத்தில் ஒரு சனி கிழமை அன்று தக்ஷ்சின சித்ரா மியூசியம் போனேன் எங்க அலுவலகத்தில் இருந்து அழைத்து சென்றார்கள் சென்னை, முட்டுகாடுக்கு மிக அருகில் இருக்கிறது திருவான்மீயூரில் இருந்து சென்றால் ஹோல்டன் பீச், மாயாஜால் என வரிசையாக பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்கின்ற ஒரு வழி மாமல்லபுரத்திற்கும் அந்த வழியாக செல்லலாம் . முட்டுக்காடு என்ற பெரிய ஏரியும் அருகே இருக்கிறது.




சரி நான் தக்ஷ்சனசித்ரா பற்றி சொல்லிவிடுகிறேன்  அத்தனை அழகான இடங்கள் அந்த காலத்தில் நாம் வாழ்ந்த இடம் எப்படி இருந்தது என்பதை கலைநயத்தோடு சொல்லியிருக்கிறார்கள். செட்டிநாடு வீடுகள் முதல் குடிசை வீடு வரை அங்கே காண கூடியதாக இருக்கிறது. நம் பழகத்தில் இருந்த அம்மி, ஆட்டுக்கல் , உரல் உழக்கை என்று எல்லாமே அங்கே காட்சி பொருளாக வைத்திருந்தார்கள். நான் அதை பார்த்துக்கொண்டே சிரித்தபடி வந்தேன். கிராமங்களில் அவை கள் இன்னுமும் இருக்கிறது ஆனால் சென்னையில் இப்படியான பொருட்களைதான் நம்முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்று காட்சிப்பொருளாக வைத்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.




பெரிய நிலபரப்பில் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள் ஆங்காங்கே அழகிய வீடுகள், அகலிகள் என அருமையாக இருந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வந்த என் அலுவலக தோழி சொன்னார். "என்ன கேர்ள் நம்ம ஊர்ல இப்படிதானே கேர்ள் இருக்கும் நம்ம வீடெல்லாம் இப்படிதானே கேர்ள் இருந்துச்சு என்றார். நான் சொன்னேன். "அது நம்ம ஊர் இது சென்னை நமக்கு இது பழசு ஆனால் சென்னை வாசிகளுக்கு இது புதுசு ... " என்றேன். உடனே அவர் சொன்னார் "அட போங்க கேர்ள் நம்ம ஊரையே நமக்கு சுத்திக்காட்டுறாங்க .. "  நான் சிரித்தப்படி அதான் சென்னை என்றேன்.

நாங்க போன நேரம் நல்ல வெயில் அங்கே சில கலைநிகழ்ச்சி வேறு இருந்தது அதை சிறிது நேரம் பார்த்தோம் அங்கே என்னை கவர்ந்தது தமிழ் எப்படி உருவானது அதன் தோற்றம் எப்படி என்று காட்டியிருந்தார்கள். அங்கேதான் இது பற்றி தெரிந்து கொண்டேன். கிராமத்து மனிதர்களின் எவ்வாறு இருக்கும் என்று அழகாக வடிவமைத்து இருந்தார்கள் அது எனக்கு பிடித்து இருந்தது. நிறைய பொருட்கள் விற்பனைக்கு வேறு வைத்திருந்தார்கள். தாகத்திற்கு மோரும், இளநீரும் கிடைக்கிறது.

அங்கே உள்ளே செல்வதற்கு ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் கட்டணம் உண்டு... அழகான மியூசியம் அமைதியாக பார்த்து வந்தோம் அப்ப நீங்க எப்ப போகப்போறீங்க. இதில் வேடிக்கை என்னவென்றால் கூகிளில் தக்ஷ்சின சித்ரா என்று தமிழில் தேடினேன் கிடைக்க வில்லை ஆனால் ஆங்கிலத்தில் www.dakshinachitra.in தேடுறேன் ஈசியா கிடைக்கின்றது. 

2 comments:

  1. This post brings me the old memories of dakshinachitra (http://dakshinachitra.net)once i visited. Good to see it again. Main motive is to showcase the rich south Indian tradition to rest of India and to the world.

    ReplyDelete