Saturday, 18 July 2015

ஆடி மாத ஸ்பெஷல் மிளகு பொங்கல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி- 200 கிராம்
பாசிப்பருப்பு- 75 கிராம்
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை:-

பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்ததும் பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து போடவும். சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும் சாதம் அடிபிடிக்காமல் கிளறிவிட்டு கொண்டே இருக்கவும். பிறகு சாதம் வெந்ததும் இறக்கி வைத்துவிட்டு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்விட்டு சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவைகளை தாளித்துக்கொட்டி இறக்கவும். இப்போது மணமான மிளகு பொங்கல் ரெடி.

இது கோவில்களில் செய்யும் பிரசாதங்களில் ஒன்று. இது புரோட்டின் நிறைந்த உணவு மட்டுமல்ல வயிற்று புண்ணையும் ஆற்றும் உணவும் கூட.

2 comments:

  1. அறியாத ஐயிட்டம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது தஞ்சாவூர் பக்கம் கல்யாணம், காதுகுத்து,என எல்லாவிஷேசங்களிலும் இட்லியோடு கண்டிப்பாக இருக்கும். இதை வெண்பொங்கல் என்றும் சொல்வார்கள். நன்றி ரமணி சார்

    ReplyDelete