Friday, 17 July 2015

ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
தேங்காய் - 1
கடுகு உளுத்தம்பருப்பு- சிறிது
கருவேப்பிலை- சிறிது
எண்ணெய் -தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய்- 3
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:-

              அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காயை துறுவிக்கொள்ளவும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், தேங்காய் ஆகியவைகளை நன்றாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வடித்த சாதத்தை அதில் கொட்டி கிளறவும். இப்போது மணமான தேங்காய் சாதம் ரெடி.

ஆடி  மாதம் வெள்ளி , செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு படைத்து வழிபடலாம்.


No comments:

Post a Comment