பிள்ளைகள் நல்லவர் ஆவதும், கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே...
எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகதான் பிறக்கிறார்கள் ஆனால் நாம் வளர்க்கும் முறைகள் மாறும்போது அவர்கள் கெட்டவர்களாக மாறுகிறார்கள் இதற்கு முழு காரணம் சுற்றுப்புறச் சூழல் ஒரு பக்கம் இருந்தாலும், அன்னைதான் முதல் காரணமாகிறாள். ஒரு வீட்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் நிறைய வீடுகளில் ஆண் குழந்தைக்குதான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவன் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து உடுத்தும் உடை வரை நிறைய வித்திசாயங்கள். அவனுக்கு பிடிக்காத உணவை அந்த வீட்டில் சமைக்க மாட்டார்கள், அவன் வெளி
யில் இருந்து வீட்டுக்கு வந்த அவனுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சி தான் பார்க்க வேண்டும். இப்படி எல்லாமே அவனுக்கு பிடித்ததில் தொடங்கி கடைசியில் வாழ்க்கை துணையை அவனே தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்கள் மனவேதனை அடைகிறார்கள். நான்
ஒரு நண்பி வீட்டுக்குச் சென்றிருந்தேன் அப்போது அவர்கள் அழைத்தார்கள் வாங்க எல்லோரும் சாப்பிடுவோம்... அப்போது அருகே இருந்த இன்னொரு அம்மா சொன்னார்கள் முதலில் ஆண்பிள்ளை சாப்பிடட்டும் அப்புறம் பெண்பிள்ளைகள் சாப்பிடலாம் என்றார்கள். உடனே நான் கொஞ்சம் அவருடன் விவாவதம் செய்தேன். ஆனால் இன்று எந்த ஆண்பிள்ளைக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்களோ அவருடைய மகன் அந்தம்மாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார். தனியாக வசித்து வருகிறார். அந்த தனிமையே அவருக்கு மனநிலை பாதிப்பை உண்டாக்கிவிட்டது. இன்னொரு

வீட்டில் ஆண்பிள்ளை ஆண்பிள்ளை என்று ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தார்கள் கடைசியில் அவன் படிப்பை கோட்டைவிட்டான் +2 ல் மிக குறைந்த மதிப்பெண் எடுத்து தாயின் மனக்கோட்டையை உடைத்தெறிந்தான் ஆனால் மகள் 10 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தாயின் நற்மதிப்பை பெற்றாள். இப்போது அந்த தாய்க்கு மகனைவிட மகளைத்தான் ரொம்ப பிடிக்கிறது. மகனிடம் எரிந்துவிழுகிறாள் தாயின் மாற்றத்தக் கண்ட மகன் தாழ்வு மனப்பான்மை உண்டாகி வீட்டில் அதிக தங்குவதில்லை, யாரோடும் பேசுவதில்லை, மகளுக்குதான் அம்மா எல்லா செய்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. ஏதாவது சொன்னால் வீட்டில் இருக்கிற எல்லா பொருளையும் உடைக்கத் தொடங்கிவிட்டான். இந்நிலை யாரால் வந்தது? தாயால்தானே எந்த பிள்ளையாக இருந்தாலும் சமமாக வளர்க்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் மனநிலையும் சரியாக இருக்கும் தாழ்வுணர்ச்சி வராது. இதை தாய்மார்கள் உணர்வதே இல்லை பிறகு பிள்ளைகள் மாறிவிட்டார்களே வருந்திக்கொண்டே இருக்கிறார்கள்.
- தராசு மீண்டும் வரும்
No comments:
Post a Comment