Tuesday 22 September 2015

இலவங்கம் / மூலிகை மருத்துவம்

இந்த பக்கத்தில் பதிவிடும் அனைத்து மருத்துவக் குறிப்புகளும் எனக்கு நன்கறிந்த பயன்படுத்திப் பார்த்த மூலிகைகளை மட்டுமே இங்கு நான் பதிவிடுகிறேன். அவை எந்தளவிற்கு குணமாகிறது என்பதை அறிந்த பிறகே உங்களுக்கு பயன்பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதில் எந்தவித பயமும் உங்களுக்கு வேண்டாம். எனது இல்லத்தில் சில மூலிகைகள் உள்ளன .


இலவங்கம்

இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.

எந்த நோயை குணப்படுத்தும்?

மயக்கம், பேதி, வாந்தி, குருதிக் கழிச்சல், எருவாய்க் கடுப்பு, செவிநோய், கண்ணில் பூ, படைகள் ஆகியவற்றை நீக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?


கிராம்பை நீர் விட்டு மை போலறைத்து, நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்றிட தலை பாரம் நீரேற்றம் குணமாகும்.
தணலில் வதக்கி வாயிலிட்டுச் சுவைக்க தொண்டைப் புண் ஆறும், பற்களின் ஈறு கெட்டியாகும்.

200மி.லி வெந்நீரில் கிராம்புத்தூள், 10 கிராம் சேர்த்து அரை மணி நேரம் வரையில் மூடி வைத்து வடிகட்டி 50 மி.லி. அளவு உட்கொள்ள பசியைத் தூண்டி கழிச்சலைப் போக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்கும்.

கிராம்பும் நிலவேம்பும் சம அளவு எடுத்து குடிநீர் செய்து கொடுக்கப் பசி உண்டாகும். அயர்ச்சி நீங்கும், சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.



No comments:

Post a Comment