Saturday 5 September 2015

குப்பை மேனி / மூலிகை மருத்துவம்

குப்பைமேனி:

சுவை: கைப்பு, கார்ப்பு,

இது எந்த நோயை குணப்படுத்தும்?

இதன் இலையால் பல்லடி நோய், தீச்சுட்ட புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய் மூலம், நமைச்சல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல் கோழை ஆகியவற்றை குணமாக்கும்.




இதை எப்படி பயன்படுத்துவது?

இலையைப் பொடித்தோ அல்லது குடிநீரிட்டோ அல்லது இலையைச் சாறு பிழிந்தோ உள்ளுக்குக் கொடுக்கலாம்.

சிறியவர்களுக்கு இலை ரசம் அல்லது குடி நீர் 2 தேக்கரண்டி வரை கொடுக்க வயிற்றைக் கழியச் செய்யும், கோழையை அகற்றும், வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

இதனை பெரியவர்களுக்கு 5மி.லி. முதல் 10 மி.லி. கொடுக்கலாம். இலையையும் உப்பையும் சேர்த்து அறைத்து சொறி சிரங்குகளுக்குத் தேய்த்துக் குளித்துவர அவை குணமாகும்.

இலைச் சாற்றை எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி வலிக்குத் தேய்த்து வரலாம். சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல்வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் பூசலாம். இதையே காது வலிக்குக் காதைச் சுற்றிப் பூச நோய் தணியும்.

இலையுடன் உப்புச் சேர்த்துச் சாறு பிழிந்து தினந்தினம் காலையில் இரு மூக்குகளிலும் நசியமிட்டு, குளிர்ந்த நீரில் தலை முழுகிவர வளிநோய் நீங்கும்.

சாறு பிழிந்து இத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து இறகில் தோய்த்து தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ, சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளிப்படும்.

இதில் 10  கிராம் எடுத்து 500 மி.லிட்டர் திராட்சைச் சாராயத்தில்  ஏழு நாள் ஊறவைத்து இடையிடையே கிளறிவிட்டு நன்றாக பிசைந்து சாறெடுத்து வடிக்கட்டி வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி வரை தேனில் கலந்து கொடுக்க மேற்கூறிய குணங்களைக் கொடுக்கும்.

இதனால் செய்யப்பட்ட மேனித்தைலத்தை 50 மி.லி கிராம் எடுத்து மனப்பாகில் கலந்து கொடுக்க கிருமி வெளிப்படும். இத்தைலத்தையே வாத நோய்களுக்கு மேலுக்குப் பூசலாம்.


No comments:

Post a Comment