Monday 7 September 2015

தனியா / மூலிகை மருத்துவம்

தனியா:

இது எந்த நோயை குணப்படுத்தும்?

பசியைத்தூண்டும், அகட்டுவாய் அகற்றும், சிறுநீர் பெருக்கும்.


விதை:

உட்சூடு, நளிர்சுரம், பயித்திய நோய், செரியாமை, வாந்தி, விக்கல், நா வறட்சி, பெரு ஏப்பம், புண் ஆகியவற்றை குணமாக்கும்.

கீரை:

தீக் குற்றத்தால் வரும் ஜுரத்தை போக்கும், விந்துவையும் பெருக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?

இலையை சாரு பிழிந்து தடவ பித்தத்தழும்பு இரத்தநோய் நீங்கும். இதன் இலையை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு கட்ட அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுக்கும். இலைக் கொழுந்தை அறைத்து துவையலாக சாப்பிடலாம்.

விதையை அதாவது (மல்லி) வறுத்து சாப்பிட குருதிக்கழிச்சலும், சோம்புடன் கலந்து சாப்பிட ஏப்பமும் நீங்கும். இருதயம் வலிமைபெறும்.

10 கிராம் சந்தனத்துடன் அறைத்துப் பூச, பித்தத் தலைவலியும், தனியாக அறைத்துப் பற்றிடத் தலைவலி மண்டையிடி (கபாலசூலை) அறைத்துக் கிளறிக்கட்ட நாட்பட்ட புண், பிளவை ஆகியவை நீங்கும். குடிநீரிட்டுக் கொப்புளிக்க தந்தவாயு நோயும் போகும்.

ஊறல்நீர்க் குடிக்கக் குழந்தை மாந்தம் போகும். கொத்தமல்லி, சந்தனம், நெல்லிவற்றல் இவற்றை ஒரளவாக சேர்த்து நீரில் ஊரவைத்துக் கொடுக்க தலைசுற்றல் நீங்கும். விதையை வாயிலிட்டு மெல்ல வாய் நாற்றம் போகும்.

No comments:

Post a Comment