Sunday 13 September 2015

நில வேம்பு / மூலிகை மருத்துவம்

நில வேம்பு:

இது எந்த நோயை குணமாக்கும்?
வலிசுரம், நீர்க்கோவை, மயக்கம் ஆகியவற்றை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்துவது?


நிலவேம்பு 10 கிராம் எடை கிச்சிலித்தோல் 150 கிராம், கொத்தமல்லி 150 கிராம் இவைகளை வெந்நீரில் சேர்த்து மூடி ஒரு மணி நேரம் சென்றபின் வடிகட்டி 30 மி.லி வீதம் தினம் 2-3 முறை கொடுக்கலாம்.

இதன் இலைச் சாற்றைக் குழந்தைகளுக்குண்டாகும் வயிற்றுப் பொருமலுக்கும், கழிச்சலுக்கும் கொடுக்கலாம்.

சிதைத்த நிலவேம்பு 10 கிராம், வசம்புத்தூள் 2 கிராம் எடை, சதகுப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு 5 கிராம் இவைகளை 400 மி.லி. வீதம் தினம் 2-3 முறை கொடுத்துவரலாம்.

சிதைத்த நிலவேம்பு 50 கிராம், வெந்நீர் 1 லிட்டர் கிராம்புத்தூள், கருவாப்பட்டைத்தூள், பொடித்த ஏலம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 5 கிராம் எடுத்து ஒன்று கூட்டி 6 மணி நேரம் ஊறவைத்து வடித்து 30 மி.லி வீதம் தினம் 2-3 முறை கொடுத்துவர சுரம், குளிர்சுரம், செரியாமை இவைகளை போக்கும்.

No comments:

Post a Comment