Wednesday 2 September 2015

கீழாநெல்லி/மூலிகை மருத்துவம்

கீழாநெல்லி:

;
இதன் சுவை : துவர்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு தன்மையுடையது.

இது எந்த வகை நோயை  குணப்படுத்தக் கூடியது?

இம்மூலிகையினால் வயிற்று மந்தம், தீக்குற்றத்தால் விளைந்த கேடு, கண்ணில் தோன்றும் நோய்க் கூட்டங்கள் குருதிக் கழிச்சல், நீரிழிவு, காமாலை, சுரம் வெப்பம், நாட்பட்ட மேகப்புண் ஆகியவற்றை இவை போக்கும்.

இதை எப்படி பயன்படுத்தலாம்?


இப்பூண்டின் இளங்கொழுந்தைக் குடிநீரிட்டுச் சீதக்கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.

இலையை உப்பு சேர்த்தறைத்துச் சொறி, சிரங்குகளுக்குப் பூசிவர குணமாகும்.

இப்பூண்டின் இலையும் வேரும் நீங்கலாக, மற்ற தண்டுகளை எடுத்துச் சாறு பிழிந்து விளக்கெண்ணெயில் கலந்து கண்காச நோயுடையோர்க்குக் கண்ணில் விடலாம்.

இலை, வேர் இரண்டையும் குடிநீரிட்டுச் சுரங்களுக்குச் சூட்டோடு கொடுத்தால் காய்ச்சல் தணியும்.

இதனையே ஆறிய பிறகு குடித்துவர உடல் வலுக்கும். இது பசித் தீயைத் தூண்டும். இதன் இலை வேர் முதலியவற்றை அறைத்து மோரில் கலக்கிக் கொடுத்துவர மஞ்சள்காமாலை, மேகநோய் குணமாகும் (உப்பில்லா பத்தியம்)

வேரைப் பச்சையாக 20 கிராம் எடுத்து அறைத்து பாலில் கலக்கிக் கொடுக்க காமாலை நோய் நீங்கும்.  

2 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete