Saturday, 18 April 2015

தஞ்சாவூர் சமையல்/கத்தரிக்காய் குருமா

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
 பொட்டுக்கடலை - தேவையான அளவு
 சோம்பு - சிறிது
 பட்டை - சிறிது
 கசகசா - சிறிது
 சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய் - 4
 பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
 இஞ்சி - சிறுதுண்டு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
 உப்பு - சிறிது


 செய்முறை:

                கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவைகளை நறுக்கி கொள்ளவும். தேங்காய், சோம்பு, சின்னவெங்காயம் 3, பூண்டு, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், கசகசா,பட்டை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

               இப்போது வாணலியை அடிப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை கசகசா, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி அரைத்த தேங்காய் கலவையை கொட்டி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது நேரத்திற்கு பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

            இப்போது சுவையான கத்தரிக்காய் குருமா ரெடி. இது சப்பாத்தி, பூரி, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

No comments:

Post a Comment