பழமை வாய்ந்த புண்ணியத் தலமான
சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜன் உயிர்கள் அனைத்திலும் இனிதே இடம்
பெற்றிருக்கிறான்.
எங்கே பக்தியிருக்கிறதோ அங்கே இறைவன் விரும்பிக் குடிகொள்கிறான். பாவங்களைப் போக்கி யருள பூவலம் என்னும் ஊரில் நீ காட்சியளித்த பெருமை உண்டு.
"தண்ணீர்ப் பந்தர் சயம் பெறவைத்து
நன்னீர்ச் சேவகனாகிய நன்மையும்"
உன் அடியவர்க்கு நன்மை செய்வதையே கொள்கையாய்க் கொண்டவன் நீ. போரில் பாண்டியன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவனுக்கும் அவனுடைய படையினருக்கும் தண்ணீர்ப் பந்தல் வைத்து நன்னீர் வழங்கும் தொண்டு செய்தனை.
அன்று நீ விருந்தினாக திருவெண்காடு வந்து குருந்த மரத்தடியில் தங்கியிருந்து பாராட்டுக்குரியது.
"தேனமர் சோலைத் திருவாரூரின்
ஞானந்தன்னை நல்கிய நன்மையும்"
தேன்சொரியும் பூஞ்சோலைகளையுடைய திருவாரூர் மேலான ஞானத்தை வழங்கிய சிறப்பு சிவனுடையதாகும்.
எட்டாத உயரத்தில் இருந்தாலும் இறைவன் தனது பக்தர்களுக்காக இறங்கி வருவான், மனமிரங்கி வருவான்.
"பக்திசெய் யடியரைப் பரம்பரத்துய்ப்பவ
னுத்தர கோச மங்கையூராகவும்"
உன்னை பக்தியுடன் தொழுவோர்க்கு முக்தியளிக்கிறாய்.
துன்பங்கள் நிறைந்தது இவ்வாழ்க்கை அதில் தோய்ந்து கிடக்கிறார்கள் மனிதர்கள் .அவர்கள் சலிப்புறும் நிலையில் இறைவனை நாடிப் பெறுகிற இன்னொரு வாழ்க்கை இருப்பதை அறிவார்கள் .அதுவே பெருவாழ்வு ,ஆனந்த வாழ்வு அதை அடைவதே பிறவியின் பயன்.
-தொடரும்

No comments:
Post a Comment