வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த வலைப்பூ ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடமாகிறது. இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கம் இந்த சமுதாயத்தின் மீதான மனக்குமறல்களை கொட்டுவதற்கும், நல்ல விஷயங்களை நாலு பேரோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த விஷயங்கள் அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆரம்பித்தேன்.
சில தகவல்களை இணையதளத்தில் தேடும் போது நாமும் இது போல் ஒன்று தொடங்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால் எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. (முதலில் ப்ளாக்கர் என்றாலே என்னவென்று தெரியாது எனக்கு மட்டுமல்ல பலருக்கு தெரியாது.) ஒரு நண்பர் வலைப்பூ ஆரம்பித்திருந்தார் அதன் பிறகு நான் ஆரம்பித்தேன் முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அப்புறம் போக போக புரிந்தது 140 பதிவுகளை இட்ட பிறகுதான் தமிழ்மணம் என்ற ஒரு வலைதிரட்டி இருக்கிறது என்று தெரிந்தது அதில் இணைந்த பிறகுதான் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அதன்பிறகுதான் ஹிட்ஸ் என்றால் என்னவென்று தெரியவந்தது.
வலைதிரட்டிகள் ஹிட்ஸ், கமாண்ட்ஸ் வைத்து வலைப்பூவிற்கு ரேங் தருகிறார்கள். அது எந்தளவு சரியானது என்று தெரியவில்லை. ஏனென்றால், கமாண்ட்ஸ் என்பது நம் பதிவுகளை படித்துவிட்டு அதற்கு சரியான விமர்சனம் செய்கிறார்களா என்பது சந்தேகம்தான். ஏனெனில், இந்த கமாண்ட்ஸ் என்பது "நீ எனக்கு கமாண்ட்ஸ் போடு, நான் உனக்குப் போடுகிறேன்" என்கிற மறைமுக ஒப்பந்தத்தில் வருவதாகவே தெரிகிறது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை, நாம் போடுகிற பதிவு அவர்களுக்கு பிடித்திருந்து, அதை உள்வாங்கி கருத்திடும் பார்வையாளர்களையே நான் பெரிதும் வரவேற்கிறேன். இவர் தெரிந்தவர் என்றோ அல்லது நாளை நமக்கு தேவைப்படுவார் என்ற ரீதியில் வரும் கமாண்ட்ஸ்கள் உண்மையானதாக இருக்காது.
அந்தவகையில் இந்த வலைப்பூ என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு மின் இதழியல் அதில் நல்ல கருத்துக்களை பதிவிடவேண்டும் அதற்கு சிறந்த விமர்சனங்களையே நான் எதிர்பார்க்கிறேன். இதுவரை என்பதிவுக்கு அதிகமாக வந்த ஹிட்ஸ் என்றால் 600 க்கு மேல் அதற்கு மேல் தாண்டியது இல்லை. அதிகம் பேரை பார்க்க வைக்க வேண்டுமென்றுதான் ஒவ்வொரு பதிவையும் இடுகிறோம் சிலது பலரை கவர்கிறது சிலது கண்டுகொள்ளாமலே போகும்.
இந்த வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடத்தில் பதிவுகள் 313 பக்கப் பார்வைகள் - 29,174, பார்வையிடும் நாடுகள் - 53, பின்தொடர்பவர்கள் - 42, கூகிள் பிளஸ்சில் பக்கப் பார்வைகள் - 1,18,067 மற்றவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஓரு வருடத்தில் மிகக்குறைவாகதான் இருக்கிறது. ஆனால், என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. இருப்பினும் இதுவரை எனக்கு ஆதரவு தந்த தமிழ்மணம், புதிதாக இணைந்த தேன்கூடு, நம் குரல் ஆகிய வலைதிரட்டிக்கும், வாசக நெஞ்சங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல.. பல...
இந்த வலைப்பூ ஆரம்பித்த பிறகு ஆதரவு தந்து கரம் நீட்டி ப்ளாக்கர் அவார்டு தந்த மதிப்பிற்குரிய கோவை கவி அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDelete