Thursday, 23 April 2015

தனுஷ் அடுத்த சூப்பர் ஸ்டாரா? பவர் ஸ்டாரா?

         
               தனுஷ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர். இப்போது எங்கு பார்த்தாலும் இவரின் முகம்தான் தென்படுகிறது. இவர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனும், செல்வராகவனின் சகோதரரும் ஆவார். இவர் 18 வயதிலே சினிமாவுக்கு நடிக்க வந்தவர். 2002 ல் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படம் பெரிய சர்சைக்கு உள்ளானது. அதன்பிறகு 'காதல் கோண்டேன்' படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் பலரின் பாராட்டையும் பெற்றார். 'திருடா திருடி' படத்தில் மன்மத ராசா பாட்டின் மூலம் இளசுகளின் மனதில் இடத்தைப் பிடித்தார்.


              அடுத்தடுத்து வந்த படங்கள் எல்லாமே அவரின் தோற்றத்திற்கு பொருந்தாத கதாபாத்திரங்களாகவே வந்தது. 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் 2 மனைவிகள் குழந்தையோடு உள்ள கதாபாத்திரம் பெரிய நடிகர்கள் பல படங்களில் நடித்தவர்கள் கூட 2 மனைவிகளுடன் நடித்ததில்லை ஆனால் அதை பொருட்படுத்தாமல் நடித்தார். அது பலருக்கு பிடிக்காமல் போனது முகம் சுழிக்க செய்தது. வயது குறைவு தோற்றமும் சிறியது ஆனால் காட்சிகள் பெரிது அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த படம் அதிக நாளும் ஓடவில்லை.

        'சுள்ளான்' படத்தில் 5, 6 ரவுடிகளை அடித்து பந்தாடுவது போல் கதாபாத்திரம் அதுவும் அவருக்கு பொருந்தவில்லை அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த காலக்கட்டத்தில் திரைக்கு வந்த 2 வருடத்தில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் 2004 ல் 21 வயதிலே ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்துகொண்டார். இதில் எல்லோரும் ஆச்சர்யப்பட்ட விஷயம் என்னவெனில்? சினிமாக்கு வந்து 2 வருடம்தான் ஆகிறது வயதும் குறைவு, ஆனால், தன்னைவிட 4 வயது அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்ய காரணம் என்ன? காதலிக்கவும் இல்லை பிறகு என்னவாக இருக்கும் என்று பலருக்கு கேள்வி குறியாகவே இருந்தது இப்பவும் இருக்கிறது. அவருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது எல்லோருமே பேசிக்கொண்டார்கள்.

             அதன்பிறகு தனுஷ் வாழ்க்கை ஏறுமுகமாகதான் இருந்தது. அடுத்தடுத்தடு நிறைய படங்களில் நடித்து படம் ஓடினாலும், ஒடாவிட்டாலும் திரையில் நம் முகத்தைக் காட்டி தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார். படங்கள் ஒடாத போதும் 1 வருடத்தில் 4-5 படங்களில் நடித்தார். 'என்னைப் பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும்' என்ற வசனம் அவருக்கு ரொம்ப பொருந்தும் அதையே தன் திரை வாழ்க்கைக்கு மூல மந்திரமாக பயன்படுத்திக்கொண்டார். அதன்படியே அடிக்கடி தன் முகத்தை திரையில் காட்டி பழக்கப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு பல படங்கள் வெற்றியை தேடித்தந்தது. 2011 ல் 'ஆடுகளம்' படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2011 ல் மட்டும் அவர் நடித்த படங்கள் -5. 2012 ல் தனது 21 வது படத்தை அவரே தயாரித்தார்.

            அதாவது, குறைந்த வருடத்திலே 20 படங்கள் நடித்து அதில் 11 படம் வெற்றி 8 படம் பிளாப் ஆன நிலையில் தயாரிப்பு என்பது பலரை யோசிக்க வைத்தது. இது எப்படி சாத்தியம் என்று? ஏனெனில் இவருக்கு முன்னால் வந்த நடிகர்கள் அதிக படங்களில் நடித்தவர்கள் இன்னும் சொந்த படம் எடுக்கவில்லை எடுக்க தயங்குகிறார்கள். ஆனால் இவரால் எப்படி முடிந்தது சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

           '3' படம் பெரிதாக ஓடவில்லை ஆனால் யூடியுப் மூலம் 'ஒய் திஸ் கொலவெறி' பாட்டின் மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக்கொண்டார். அதிகம் பேர் பார்த்தவை என்ற பெருமையை தேடிக்கொண்டார். அந்த பாட்டில் விஷயம் ஒன்றுமில்லை, அர்த்தமில்லை, கருத்தில்லை, ஆனால் உலகளவில் பேசப்பட்டது இந்திய பிரதமர் கூட வாழ்த்து  தெரிவித்தார்.
எதற்காக இந்த வாழ்த்து என்று பலர் குழம்பி போய் நிற்கிறார்கள். அருமையான வரிகளில், இனிமையான இசையில், மதுரமான குரலில் பாடப்பட்ட அர்த்தமுள்ள. கருத்துள்ள எத்தனையோ பாடல்கள் இந்தளவுக்கு பேசப்படவில்லை, என்ற வருத்தம் பலருக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும் என்று தன்னை தேற்றிக்கொள்கிறார்கள்.

           அதன்பிறகு இப்போது பல இடங்களில் இவர் பேசப்படுகிறார், விருதுகள் பல வழங்கப்படுகிறது. அதாவது ஒடாத படங்களுக்கு ஒரு சில காட்சிகளை வைத்து அதற்கு விருது கொடுப்பதாக விளக்கம் சொல்கிறார்கள். தொலைக்காட்சியில் இவரின் முகத்தைதான் அடிக்கடி காட்டுகிறார்கள் , சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். இவரின் விஸ்வரூப வெற்றிக்கு எது காரணமாக இருக்கும் என்று பலர் குழம்பி நிற்கிறார்கள். ஏனெனில் இந்த 13 வருடத்தில் 30 படங்கள் அதில் 12 ஒடிய படங்கள் 18 பிளாப் இதில் 4 படங்கள் இவர் தயாரிப்பு அதில் 2 படம் வெற்றி. இவரின் படத்தில் இவரே பாடல் எழுதி இவரே பாடிக்கொள்கிறார். பாடலாசிரியருக்கோ, பாடருக்கோ வாய்ப்பு குறைவுதான். இவருக்கு சினிமாவில் போட்டி என்றால் சிம்பு ஆனால் இப்போது அவரும் நண்பராகி விட்டார். இவருக்கு தற்போது போட்டி யாரும் இல்லை.


               இவர் ஏதாவது ஒன்று செய்தால் டுவிட்டரிலும், யூடியுப்பிலும் வெளியிட்டு விடுவார். இவரைப் பார்த்து பல இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கு அதுமட்டுமல்ல, முன்பு சிறுபிள்ளைபோல் இழுத்து இழுத்து இவரின் பேச்சு அமைந்திருக்கும். இப்போது நடை, உடை பாவணைகள் அனைத்தும் ரஜினியை போல் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறார். ஆனால் இவர் அடுத்த சூப்பர் ஸ்டாரா? பவர் ஸ்டாரா?

No comments:

Post a Comment