Wednesday, 8 April 2015

தஞ்சாவூர் சமையல்/ மணத்தக்காளி வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வத்தல் - 1 கையளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 பூண்டு - 100 கிராம் 
தக்காளி - 2
 மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
 மல்லித்தூள் - 1 கரண்டி
 பெருங்காயம் - சிறதளவு
சக்கரை - 1/2 ஸ்பூன்
 வெந்தயம் - சிறிதளவு
 கறிவேப்பிலை- சிறிதளவு
 எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

               கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், மணத்தக்காளி வற்றல், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். அதில் கரைத்தப் புளித்தண்ணியை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இறக்கவும்.

              இப்போது மணமான மணத்தக்காளி வத்தக்குழம்பு ரெடி.

No comments:

Post a Comment