பெண்ணையும்,
பொன்னையும் நாடுகிறவர்கள், காமத்தை விரும்பி ஏற்கிறவர்களுக்கு
நோய்வாய்பட்டு இந்த உடல் அழிந்துவிடும் என்கிறார் மாணிக்கவாசகர்.
காருறு கண்ணியரைம்புல
னாற்றங் கரைமரமாய்
வேருறுவேனை விடுதிகண்
டாய் விளங்குந்திருவா
ரூருறை வாய்மன்னு முத்தர
கோசமங்கைக் கரசே
வாருறு பூண்முலையாள் பங்க
வென்னை வளர்ப்பவனே
ஆற்றங்கரையில் வளர்கின்ற மரம் வெள்ளத்தால் அழிந்து போகும் ஐம்புலன்களும் காமம் என்கிற பிணிவாய்பட்டு அழிந்துவிடும்(கரைபுரளும் வெள்ளம் அரிப்புண்டு பண்ணுவதுபோல் காமமும் அழிவை உண்டு பண்ணும்) அதனால் என்னை நல்வழிப்படுத்து இறைவா என்கிறார். அழிவு என்பது போகிக்கு மட்டுமல்ல அவனுடைய போகத்தில் பங்குபெற்ற புலன்களுக்குமுண்டு.
'செழிகின்ற தீப்புகு விட்டிலிற்
சின்மொழியாரிற் பன்னாள்
விழுகின்ற வென்னை விடுதிகண்
டாய் வெறிவாயறுகா
லுழுகின்ற பூமுடியுத்தர
கோச மங்கைக்கரசே
வழிநின்று நின்னருளாரமு
தூட்ட மறுத்தனனே.
தீயில் விழுகிற விட்டில் பூச்சி போல் நான் காமத்தீயில் விழுகிறேன். என்னையும் நீ ஆட்கொண்டு அருளென்னும் அமுத்தை வழங்கினாய். நான் அதை ஏற்க மறுத்தேன் என்பதற்காய் என்னை நீ விட்டுவிடாதே
விளக்கில் வீழ்ந்த விட்டில் பூச்சியின் கதிதான் காமத்தில் உழல்வோருக்கும்.
மறுத்தனன் யானுன் னருளறி
யாமையிலென் மணியே
வெறுத்தெனை நீ விட்டிடுதி கண்டாய்
வினையின் றொகுதி
யொறுத்தெனையாண்டு கொளுத்தர
கோசமங்கைக்கரசே
பொறுப்பரன்றே பெரியோர்சிறு
நாய்கடம் பொய்யினையே
என் அறியாமையாலன்றோ உன்னருளை நான் ஒதுக்க முனைந்தேன்! அதனால் என்னை நீ விட்டு விடுவாயோ? விட்டு விடாதே. பல பிறவிகளில் நான் செய்த கர்மங்களையெல்லாம் அகற்றி என்னை நீ ஆண்டு கொள். நான் என்பது உடலா, உயிரா, மனமா? என்கிற சர்ச்சை எப்போதுமே உண்டு.
கொழுமணியேர் நகையார் கொங்கைக்
குன்றிடைச் சென்றுகுன்றி
விழுமடியேனை விடுதிகண்டாய்
மெய்ம்முழுதும் கம்பித்
தழும்டியாரிடை யார்த்தவைத்
தாட்கொண்டருளி யென்னைக்
கழுமணியேயின்னும் காட்டுகண்
டாய்நின் புலன்கழலே.
அற்ப இன்பத்துக்கு ஆசைப்பட்டு அழகிய பெண்களிடம் மயங்கும் இந்த அறிவிலியைக் காப்பாற்ற மாட்டாயா? அன்பில் அழுதுருகும் பக்தர்களோடு என்னையும் சேர்த்துக்கொள்.
பெண்ணின் மார்பகங்களைத் தீண்டி மகிழ்வது பேரின்பமாய்த் தெரிகிறது மனிதர்களுக்கு. இது மரணத்தைப் போல் பயங்கரமான துன்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதை நல்லதோர் உவமானத்துடன் காட்டுகிறார் மாணிக்கவாசகர்.
குன்றினை நிகர்க்கும் மாதரின் கொங்கைகள், அவற்றை இச்சித்து அவர்களோடு கூடி மகிழ்வதே குறிக்கோளாய்க் கொண்டவன் மேல்விளைவுகள் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. குன்றில் இருந்து விழுந்தால் இறந்து போவோம் என்பது தெரியாவிட்டால் அழிவுதான். இதனை கொங்கைக் குன்றிடைச் சென்று விழும் அடியேனை என்ற சொற்றொடர் குறிக்கிறது.
-தொடரும்.

No comments:
Post a Comment