Tuesday, 7 April 2015

விஜய் படத்தின் கத்தி பாடல்கள்

             விஜய் படம் என்றால் பாடலுக்கும், நடனத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். இது எல்லோரும் அறிந்ததே ஆனால் சமீபத்தில் வந்த கத்தி படத்தில் எந்த பாடலும் நன்றாக இல்லை என்பதே உண்மை. எனக்கு விஜய் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். கத்தி படத்தில் நிறைய சொதப்பல்கள். ஒரு சில பாடல்களை கேட்டேன் என்ன பாடல்கள் இப்படி இருக்கிறது என நினைக்க வைத்தது. "ஷெல்பிக்குள்ள" பாடல் மட்டும் சிலர் முணுமுணுத்தார்கள் மற்ற பாடல்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.


               ஆனால் அதற்கு முந்தைய படமான ஜில்லா பட பாடல்கள் இன்று வரை எல்லா இடங்களிலும் ஒலிக்கிறது, எல்லா மனதிலும் இருக்கிறது. கத்தி படத்தின் பாடல்களைக் கேட்கும் போது இது விஜய் படத்தில் உள்ள பாடலா என்று யோசிக்க வைக்கிறது. பாடலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் எப்படி இதை கவனிக்காமல் விட்டார்?

             புலி வருது புலி வருது என்கிறார்கள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. புளிக்குமா? இனிக்குமா?

No comments:

Post a Comment