Tuesday, 7 April 2015

திருவாசகம்

          'பரந்து கிடக்கின்ற அண்டமானதால் பரம்பொருள் என்றும், கடந்து நிற்பதால் கடவுள் என்றும் குறிக்கப்பெற்றவன். அவனை அருவமானவன் என்பார்கள். ஆனால் லட்சோப லட்சத் தாரகைகள் மூலம் தன்னுடைய இருப்பை அவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். கோடான கோடி உயிரனங்கள் பொருந்திக் கிடக்கிற உலகில் ஒரு சீர்த்தன்மை காணப்படுகிறது. வினையின் விளைவாய் உடலெடுத்து ஐம்பொறிகளின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கிடக்கிற நான் அகிலத்து நாயகனை எப்படி அறிந்து போற்றுவது?


 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
 பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
 கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
 வல்ல சுரராகி முனிவராய்த் தேவராய்ச்
 செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து
 ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்'

               ஜடப்பொருள் எனப்படும் கல்லாகவும், அற்பப் புல்லாகவும் இருந்தேன். சேதனம் எனப்படும் உயிரினத்திலும் மேலான மனிதப் பிறவியும் எடுத்துவந்தேன். மீண்டும் மீண்டும் இங்கே பிறந்து சலிப்படைந்தேன்.

அடுத்து மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

        பிறப்பென்னும் விலங்கொடித்து, என்னை உனது சேவைக்காளாக்கிக் கொண்டது உந்தன் கருணையல்லவா

'நாற்றத்தினேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே'

           வாசமலர் போன்றவனே! உன்னைப் பணிவார்க்குப் பக்கத்திலும், பணியார்க்கு தொலைவிலும் இருக்கின்றாய். மாற்றமில்லாத மனங்களில் தோற்றமளிப்பவன் நீயல்லவோ!

         எங்கிருந்து பார்த்தாலும் பூ அழகுதான. ஆனால் அருகில் சென்றால்தான் அதன் மணத்தை நுகர முடியும். தன்னை அறிந்தவர்க்கு வெகு அருகிலும், அறியாதவருக்குத் தூரத்திலும் இருக்கிறான் இறைவன்.

        அமிர்தத்தை உண்டவரே அழிவதில்லை, அமிர்தமே உருவாயெடுத்தவனுக்கு அழிவேது?

'பாசமாம் பற்றறுத்து பாரிக்கு மாரியனே
நேசவருள் புரிந்த நெஞ்சில் வஞ்சங்கெட'

         பாசமாகிய பிணைப்பிலிருந்து என்னை விடுவித்துக் காக்கின்ற ஆசாரியன் நீ. நேசிக்குமாறு அருள் புரிந்து என் நெஞ்சத்தின் நீசத்தனத்தை அகற்றாய் என்று எத்தனை அழகாக சொல்கிறார் பாருங்கள்.

          பாசம் சுயநலம் கொண்டது ஓர் எல்லைக்குட்பட்டது அன்போ தன்னலமற்றது விவானது என்கிறார்.

       நான் என்பது உடலல்ல ஆத்மா என்பதை உணரவேண்டும். ஆத்மா உணர்வை வளர்த்துக் கொண்டால் மெய்யுடல் பெறுவோம்.

                                  -தொடரும்

2 comments:

  1. நல்ல பதிவு சந்திரா.
    தொருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete