Tuesday, 28 April 2015

கொம்புத் தேன்

அன்னை தெரசாவைப் பார்த்து
 சமூக சேவகியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!

 சுவாமி விவேகானந்தரைப் பார்த்து
 நல்ல ஆன்மீகவாதியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!


 உலகில் நடக்கிற குற்றங்களைப் பார்த்து
 கிரேண்பேடியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!

 முன்னேற்றம் இல்லாத ஊர்களைப் பார்த்து
மாவட்ட ஆட்சியரா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!

சட்டதிற்கு விரோதமான செயல்களைப் பார்த்து
 உண்மைகளை அம்பலப்படுத்தும்
ரிப்போட்டரா வரவேண்டுமென்று
 ஆசைப்பட்டேன்!

 ஆனால், இதில் எதிலும் இப்ப நானில்லை
 ஒருவேளை இருந்திருந்தால் இப்ப
நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்!

                                         இப்படிக்கு,
                                           நுடவன்.

No comments:

Post a Comment