Wednesday 16 December 2015

சென்னையில் உள்ள குப்பைகளை அகற்ற உடனடி தீர்வு

              அரசு நினைத்தால் சென்னையில் உள்ள குப்பைகளை உடனே அகற்றலாம். அதற்கு இரண்டே வழிகள் உள்ளன. 1. அனைத்து குப்பைகளையும் தீ வைத்து கொளுத்துவது. தீ வைத்தால் காற்று மாசுப்படும் என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடித் தூக்குவார்கள், இதை நாம் விட்டுவிடுவோம். 2 வது வழி சென்னைக்கு வெளியே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஒரு 4-5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இடத்தைப் பிடித்து அதில் ஏரிகள் போன்ற அமைப்பில் இரண்டு குழிகள் (அதாவது பள்ளங்கள்) வெட்டி அதில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று இரண்டாக பிரித்து தனித்தனியாக கொட்ட வேண்டும். அதன் அருகிலே கழிவுகளை அகற்றும் ஒரு சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.


              இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஒன்றுமில்லை லாபம்தான் கிட்டும். எப்படியெனில்? தொழிற்சாலைகள் கட்டுவதன் மூலம் உரம் தயாரிக்கலாம், எரிவாயு தயாரிக்கலாம் இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம் அதில் உள்ள வருமானத்தை வைத்தே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம். அதுமட்டுமல்ல, சென்னையும் சுத்தமாகும் மக்களும் சுகாதார கேடுயின்றி வாழ்வார்கள் அரசுக்கு நல்ல பெயர் கிட்டும் சென்னை குப்பைகள் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

               சென்னையில் உள்ள குப்பைகளை அகற்ற ஒரே வழி இதுதான். இந்த வழி பழசா இருந்தாலும் புதுசா செய்வோமே... முதற்கட்டமாக குழிகளை வெட்டி குப்பைகளை கொட்டத் தொடங்கலாம் அதன்பிறகு தொழிற்சாலை கட்டத்தொடங்கலாம். அதற்குள் குப்பைகள் மக்கி உரமாக நிற்கும் படிப்படியாக மற்ற வேலைகளைத் தொடங்கலாம். இது ஒரு நல்ல தொழில் மட்டுமல்ல பயனில்லாத குப்பைகளை வைத்து பல சாதனைகளை செய்யலாம்.

                எப்படி அகற்றுவது எப்படி அகற்றுவது என்று யோசித்து நாட்களைக் கடத்தி வருடங்களை நகர்த்தி அடுத்த மழை வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக வேலைகளைத் தொடங்கினால் சிறப்பான செயலாக இருக்கும். இல்லையென்றால் மற்ற நாடுகள் நம்மை ஏசும் சுகாதாரமற்ற இந்தியா என்று பறைச்சாற்றும்.

                  குறைந்த பட்ஷெட்டில் இந்த திட்டத்தை தொடங்கலாம் எல்லோருக்கும் நன்மை பயக்கும். சமூக ஆர்வாளார்கள் அரசு அதிகாரிகள் இதை பார்வையிட்டால் அரசிடம் கொண்டு செல்லுங்கள். இது சென்னைக்கு தற்காலிக தீர்வு அல்ல நிரந்தரமான தீர்வு.

#ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment