Sunday 20 December 2015

உதவிகரம் நீட்டியவர்கள்

              சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய திரை நட்சத்திரங்களை விட, சின்னத்திரை நட்சத்திரங்களை விட அதிகம் களத்தில் இறங்கி உதவி செய்தது "வானொலி அறிவிப்பாளர்கள் தான்" இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய வேண்டிய ஒன்று மழைக்காலங்களில் மின்சாரம் இல்லாமல் போனாலும் செய்திகள் மக்களிடையே கொண்டு செல்வது வானொலிதான். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்து வானொலி அறிவிப்பாளர்கள்தான் அனைத்து வானொலி அறிவிப்பாளர்களுக்கும் நன்றி சொல்வதோடு பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

              முகமறிந்தவர்கள் எல்லாம் வெளியே வராத போது முகமறியாதவர்கள் களத்தில் இறங்கி உதவி செய்தது உண்மையில் பெருமைக்குரியது. எப்பவும் திரைக்கு பின்னுக்கு இருப்பவர்களே உண்மையான ஹீரோக்கள்.


             சில நடிகர்கள் பெரும் உதவி செய்திருக்கிறார்கள் இருப்பினும் சில நடிகர்கள் கேட்கிறார்கள் "கஷ்டப்பட்டு நாங்க உழைத்தப் பணத்தை ஏன் கொடுக்க வேண்டும்? தொழில் அதிபர்களும் நிறைய சம்பாதிக்கிறார்கள் அவர்களிடம் யாரும் கேட்பதில்லை ஆனால் சினிமாக்காரர்களிடமே பணம் எதிர்பார்க்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்"
ஹீரோக்களே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு தொழில் அதிபர்களின் புகைப்படமும் எந்த ஒரு வீட்டிலும் மனதிலும் இல்லை. ஆனால் உங்களுடைய புகைப்படம் தான் அவர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்கிறது. அவர்களின் உழைப்பில் வந்த பணத்தில்தான் உங்க உழைப்புக்கு ஊதியமாக வந்து சேர்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் திரையில் மிக நல்லவராக நடிப்பதால் நிஜத்திலும் நீங்கள் அப்படி இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள். அதனால்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
 
               அன்றாடம் கூலி வேலை செய்கிறவர்கள் கூட தனக்கு கிடைக்கிற கூலிப் பணத்தில் இருந்து உதவி செய்ய நினைக்கும் போது நீங்கள் தாராளமாக உதவி செய்யலாம். ஏனெனில் நாளைப்பற்றி நினைக்காமல் சேர்த்து வைக்கத் தோணாமல் உதவி செய்யும் போது பத்து தலைமுறைக்கு சேர்த்து வைத்திருக்கும் நீங்கள் உதவி செய்வதில் எந்த நட்டமும் இல்லை. அப்படியும் மனமில்லையெனில் நீங்கள் சினிமாவில் நல்லவனாக நடிப்பதில் எந்த பெருமையும் இல்லை.

          வானொலி அறிவிப்பாளர்களுக்கும்,  அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்து உதவி செய்த தன்னார்வ தொண்டர்களுக்கும், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.


 வானொலிக்கு ஒரு பெரிய சல்யூட் 

No comments:

Post a Comment