Wednesday 16 December 2015

பசலிக்கீரைக்க கூட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

பசலிக் கீரை  - 1 கட்டு
பாசிப்பருப்பு - 50 கிராம்
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
பெரியவெங்காயம் - 2
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை:-

பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும் அதோடு நறுக்கிய பச்சைமிளகாய் 4 வெங்காயம், தக்காளி,பூண்டு ஆகியவற்றை சேர்த்து வேக வேக்கவும். தேங்காயோடு சீரகம், பச்சைமிளகாய் 2 சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 பருப்பு வெந்ததும் இறக்கி வைத்துவிட்டு, கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி  சூடானது கீரையை வதக்கி அதன்பிறகு வேக வைத்த பருப்பையும், தேங்காயும், உப்பும் சேர்த்து சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும். இப்போது சுவையான பசலிக்கீரைக் கூட்டு ரெடி

பின்குறிப்பு:
இந்த கீரையை மட்டும் வதக்கிய பிறகுதான் கூட்டோ அல்லது சாம்பாரோ வைக்க வேண்டும் இல்லையென்றால் நன்றாக இருக்காது வழவழவென்று இருக்கும் வெண்டைக்காய் மாதிரி. இதில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து உள்ளது. அதுமட்டுமல்ல நார்ச்சத்தும் உள்ளது அதோட நரம்பு சம்பந்தமான வியாதி, மலச்சிக்கல் ஆகியவற்று நல்லது, கொழுப்பையும் கரைக்கும்  இரத்த சிவப்பணுக்களை விருத்தி செய்யும்.

No comments:

Post a Comment