Thursday 3 December 2015

சென்னையில் வெள்ளம்

#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது

ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை சென்னையில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ஒரு பெரிய தொகை கொடுத்தால் அதை வைத்து அவர்கள் இழந்ததை மீட்டு கொள்வார்கள்... ஆனால் அரசு என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை. அரிசி கொடுத்தேன், பருப்பு கொடுத்தேன், போர்வை கொடுத்தேன், தலா 10 ஆயிரம் பணம் கொடுத்தேன்னு யாரும் கணக்கு காட்டாமல் இருந்தால் சரி... இதுவரை
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தையும், தொண்டு நிறுவனங்கள் தரும் உதவிகளையும் பெற்று வருகிறார்கள் ... மேலும் பலர் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நான்கு பக்கமும் உதவிகள் வந்து கொண்டு இருக்கிறது..அவை அத்தனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்...

சென்னையில் எத்தனை குடும்பங்கள் வசிக்கிறது.... இந்த பணத்தை பங்கிட்டால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு பணம் கொடுக்கலாம் கணக்கிடுங்கள் நண்பர்களே...#srichandra

7 comments:

  1. உண்மையை உரக்கச் சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரரே..

    ReplyDelete
  3. "தேன் தொட்டார், கை நக்குவார்" , நெல்லுக்கிறைத்து புல்லுக்கும் எனப் பயிற்றப்பட்டவர்கள் நாம் அதனால் இவை சரியாகச் சேரும் என்பதில் எனக்குச் மிகச் சந்தேகம்.
    இதுவரையில் எத்தனை இலட்சம் கைமாறியதோ?

    ReplyDelete
  4. உண்மைதான் ... ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல்... அரசியல்வாதிகள் பணத்தை அமுக்காமல் இருந்தால் நல்லது.. நன்றி யோகன்

    ReplyDelete
  5. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமாச்சே... ஆளும் அரசு அமுக்காமல் இருக்காது.... ஒரு பானைசோற்றுக்கு ஒர சோறு பதம்போல.......

    ReplyDelete
  6. அம்மாவின் விருப்படி காலையில் மலம் கழித்தேன்
    அம்மாவின் விருப்படி சிறுநீர் கழித்தேன்
    அம்மாவின் ஆணைப்படி இரவு உறங்கினேன்
    தமிழர்களின் தன்மானம் எங்கே போனது வெட்கமாக உள்ளது

    ReplyDelete
  7. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என்றுதான் சொல்கிறார்கள்

    ReplyDelete