சிறு பெண்ணொருத்தி தனது தாயிடம் இறைவனின் தன்மைகளை எடுத்துக் கூறுவது.
கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்
உள்ளத்தே நீங்காது நின்று என்னை உருக்குபவர். அப்படி உருக்கிப் பேரின்பம் தருபவர். எனது வற்றாத கண்ணீர் ஆனந்தம் பெறுதற்கானது.
உன்னற்கரிய சீர் உத்தர மங்கையர்
மன்னுவதென் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவதென் நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்
எண்ணற்ற சிறப்புடைய இறைவன் என் நெஞ்சில் நிலை பெற்றுள்ளார். அவரை எதற்காகத் தாயே வெளியில் தேடுவது?
தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாளம் இருந்தாவறன்னே என்னும்
எம்மை அடிமையாக ஆள்பவர். ஆட்கொள்ளும் ஈசன் கையில் தாளம் தாங்கியது ஏனோ? காலத்துக் கப்பாற்பட்டவர் காலத்தை ஆள்வதனால் தானோ?

இவை எதனையும் நான் முன்பு படித்தது இல்லை.. 10 ம்க்தி வகுப்பில் சிலதை படித்து இருக்கலாம்.. நினைவு இல்லை பக்தி மார்க்கத்தில்ரு க்கிற எனக்கு அனைத்தும் இனிப்பாக உள்ளன.. முக்தியடைந்த பக்தர்களின் அனுபவம் பெரிய பொக்காஷம்தானே..!
ReplyDeleteநல்லது மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
ReplyDelete