Friday, 23 December 2016

மனதோடு மனம்

சென்னைக்கு வந்த பிறகு என் மனதை கலங்க செய்த ஒரு விஷயம். எப்போதுமே நம் மனசுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இதை செய் இதை செய்யாதே என்று சொல்லும். அதே தான் நட்பு விஷயத்திலும் நாம் எல்லோரிடத்திலும் அத்தனை இலகுவாக பழகிட முடியாது காரணம் நம்பிக்கையின்மை ஏனெனில் யார் எப்படி என்று நமக்கு தெரியாது எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று யாருக்கும் தெரியாது. அந்த ஜாக்கிரதை உணர்வால் சிலரை நாம் தவிர்த்து இருப்போம் நம்மை அறியாமலே அவர்கள் மனதை நாம் காயம் செய்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நினைத்து பார்க்கும் போது நாம் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

Wednesday, 19 October 2016

காந்தி மண்டபம்/ Chennai Gandhi Museum


                   விடுமுறை நாளில் எங்கு செல்லலாம் என யோசித்தபோது காந்தி மண்டபம் என் கண்ணைக் கவரந்தது. சரி போய்வரலாம் என்று காந்தி மண்டபத்தில் நுழைந்தேன் கண்ணிற்கு ஒரே குளிர்ச்சியாக இருந்தது. மனதிற்குள் பச்சை நிறமே... பச்சை நிறமே... என பாடல் முணுமணுக்க செய்தது. உள்ளே நுழையும்போதே கோவில் போன்ற அமைப்பில் காந்தி மண்டபம் கம்பீரமாக இருக்கிறது.


Sunday, 18 September 2016

கதம்பமாலை ....Mannuku maram paaramma / chandra





வீடியோவை பார்த்தீர்களா...! எப்படி இருக்கிறது உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள் நண்பர்களே...

Friday, 16 September 2016

போராட்டத்தின் பயன் என்ன?

பந்த் என்ற பெயரில் கடைகளை முடுவது, பஸ்கள் ஓடாமல் நிறுத்தவது இதில் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அரசுக்கும் மக்களுக்கும் நஷ்டம் தான் கிடைக்கும். இதையே இரண்டு நாளைக்கு மின்சாரத்தை நிறுத்தி போராட்டம் செய்யுங்கள் ஏதாவது பலன் கிடைக்கும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படுவதோடு மக்கள் அதனால் ஏற்படு கஷ்டங்களை உணர்வார்கள்.

Thursday, 15 September 2016

இறால் பீர்க்கங்காய் தொக்கு / தஞ்சாவூர் சமையல்

தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ
தக்காளி - 1
பீர்க்கங்காய் - 1 கப்
பூண்டு - 6,7பல்
இஞ்சி -சிறு துண்டு
சோம்பு - 1ஸ்பூன்
பச்சை மிளகாய்  -2
 மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - சிறிது

Tuesday, 30 August 2016

தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமங்கள் தூய்மை பெறுமா..?




தூய்மை இந்தியா... தூயமை இந்தியா... என்று அய்யா மோடி அவர்கள் தொலைக்காட்சியிலும்,  வானொலியிலும் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் என்ன பயன் யார் பயன் பெற்றார்கள் என்று அய்யா மோடி அவர்களுக்குத் தெரியாது. எத்தனையோ கிராமங்களில் வெளிப்புறங்களில்தான் இன்னும் மலம்கழிக்கிறார்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு அவர்கள் மலம் கழிப்பதை நிறுத்தி விடுவார்களா என்ன?  ஏனெனில் அவர்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது இந்த சூழ்நிலையில் அவர்கள் எங்கே செல்வார்கள்...?

Saturday, 6 August 2016

கருப்பு பெட்டிக்குள் சிவப்பு இதயம் / நண்பர்கள் தின கவிதை

       
                         


அடிக்கடி கடலில் விழுகின்ற
விமானம் போல் உன் மனக்கடலில்
விழுந்து நான் காணாமல்
போய்க்கொண்டு இருக்கிறேன் ...

சாலையோர யாசகன்


நீ....
நடந்து வருகையில்
சாலை மரங்களெல்லாம்
பூக்களைத் தூவி
சாமரம் வீசுகிறது...!

Friday, 5 August 2016

பாட்டி சொன்ன மந்திரம் / சிறுகதை


       
                //பாட்டி சொன்ன மந்திரம் //



             கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போல் பலவித இரைச்சல்களோடு நிரம்பி வழிந்தது கூட்டம், அங்குமிங்கும் பல சத்தங்களுக்கு இடையில் கேட்டது கண்டக்டரின் குரல்.   திருச்சி... திருச்சி... திருச்சி போறவங்கல்லாம் வண்டில ஏறுங்க.... கண்டக்டர் கத்திக்கொண்டு இருந்தார். வாங்கம்மா... திருச்சியா... வாங்க வாங்க..." வலுக்கட்டாயமாக அழைத்தர். இல்லையென கண்களால் பதில் சொல்லிய படி ஒரு டிராவல் பேக் பின்னால் இழுக்க,  தோளில் மாட்டியிருந்த ஹேன்பேக் இன்னொரு பக்கம் சரிந்து கொட்ட அதை சரிசெய்துகொண்டே மன்னார்குடி பஸ் நிக்கிறதா என பார்த்துக்கொண்டே வேகமாக நடந்து சென்றாள் காவியா.. நாலைந்து பஸ்களை கடந்து மன்னார்குடி பஸ் நின்றது. டிக்கெட் வாங்கலாம் என்று அருகே சென்றால் கண்டக்டரைச் சுற்றி ஒரே கூட்டம். சார் ... கும்பகோணம் ஒன்னு, சார்... மன்னார்குடி ஒன்னு... சார் ... நீடாமங்கலம் ஒன்னு ஒருவர் மேல் ஒருவர் கைகளை நீட்டிய நின்றனர் பயணிகள். அதற்கு நடுவே கைகளை நீட்டி " சார்.. மன்னார்குடி ஒன்னு லேடிஸ் " என்றாள் காவியா. கண்டக்டர் கண்ணாடிக்கு இடையில் மேலே பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் மற்றவர்களுக்கு டிக்கொடுக்க தயாரானார். சிறிது நேர காத்திருப்புக்கு பின் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் நம்பர் ரெண்டுல உட்காரும்மா " என்றபடி டிக்கெட்டை கொடுத்தார்.

Friday, 29 July 2016

அறுவடை

சிலர் நம்மை காயப்படுத்த
சில விஷயங் (விதை)களை
விதைத்துக் கொண்டே செல்கிறார்கள்
நாம் அதை மகிழ்ச்சியாக
அறுவடை செய்வது தெரியாமலே...

#மகிழ்ச்சி

இரக்க குணம் யாருக்கு?

               நான் வசிக்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி பிளாட் பாரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகே தான் அந்த பாட்டியின் இருப்பிடம்.  புங்கை மர நிழலில் கால் நீட்டிய படி அமர்ந்து இருக்கும். ஒரு பையில் சில துணிகள் அருகில் ஒரு தட்டு ஒரு டம்ளர் இதுதான் அந்த பாட்டியின் அசையும் அசையா சொத்துக்கள். நான் அந்த வழியாக செல்லும்போது அந்த பாட்டியை பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம். இன்று லேசாக மழை அந்த பாட்டி எங்கே தூங்கியிருக்கும் என்று சிந்தனையோடு சென்றேன். 

Thursday, 28 July 2016

வனத்தில் சிக்கிய மனம் / தொடர்

               தஞ்சையோ, தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிறந்தவர்களுக்கு மற்ற ஊர்களுக்கு செல்ல பிடிக்காது அத்தனை விருப்பம் இருக்காது. அதற்கு காரணம் இருக்கிறது ஏனெனில் இங்கே உள்ள சூழல் அப்படி. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடுகின்ற தஞ்சை அல்லவா... காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களுக்கு மற்ற ஊர்களின் தண்ணீர் வேம்புதான். அதுமட்டுமல்ல கலாச்சாரமுமஹ, பண்பாடு, பாரம்பரியம் என்ற மண் சார்ந்த மனிதர்கள் அத்தனை எளிதில் மனம் மாற இயலாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.. தஞ்சையை விட்டு போகக்கூடாது என்றிருந்தேன் காலத்தின் சூழல் என்னை சென்னை கொண்டு வந்து சேர்த்தது.

Tuesday, 26 July 2016

தொலைந்த விமானம்

முன்பு
விமானம் பறந்து செல்கையில்
எதிர்பார்ப்பு இருந்தது
ஏமாற்றத்தோடு பார்த்தேன்...!

Friday, 22 July 2016

சிபாரிசு வேண்டாம்

         


         உறவினர் மூலமோ, தெரிந்தவர் மூலமோ, நண்பரின் மூலமோ கிடைக்கின்ற வேலை என்றுமே நிறந்தரமில்லாததது.

          உன் திறமைக்கு உனக்கு வேலையில்லை உனக்குத் தெரிந்தவரின் திறமைக்கே உனக்கு வேலைக்கிடைத்திருக்கிறது.

Wednesday, 20 July 2016

திசை மாறிய காற்று - viedo


                   கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி இதுவரை உங்களை கஷ்டபடுத்தியது போதாது என்று செவி வழியாகவும் தொல்லைக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.... ஹா....ஹா....



கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்...... அய்யோ......

Sunday, 17 July 2016

Siva puranam - 1









சிவபுராணம் படித்திருப்போம் அதுவே பாடல் வழியாக செவிக்கு விருந்தாக வாருங்கள் கேட்டு பார்த்து மகிழ்வோம் .














Thursday, 30 June 2016

நீதிமன்றமும் காவல் நிலையமும் எதற்கு?

நீதிமன்றமும் காவல் நிலையமும் இனி தேவையில்லையா...?

 ஆட்கள் நடமாடும் இரயில் நிலையத்தில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள் சுற்றியிருந்தவர்கள் யாரும் தடுக்கவில்லை, ரோந்து போலிஸ் வரவில்லை, இரயில் காவல் நிலை அதிகாரிகள் வரவில்லை, கொலை செய்தவன் போட்டோ தெளிவாக பதிவாகி இருக்கிறது போலிஸ் இன்னும் விசாரணை தான் செய்து கொண்டு இருக்கிறது கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் பொது மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று எல்லோருமே வலைதளத்திலும் தொலைகாட்சியிலும் கூறிக்கொண்டு  இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவர் சொல்கிறார் கொலையுண்ட பெண்ணின் மீது யாரும் ஒரு கர்சிப் கூட போட மனமில்லை என்று , ஒருவேளை கர்சிப் போட்டிருந்தால் இது கொலையாளி விட்டு சென்ற கர்சிப் என போலிஸ் துப்பு துலக்கும்.

Wednesday, 1 June 2016

காத்திருப்பு

நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கும் கொக்கைபோல்
யாருமற்ற நந்தவனத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்..!

Friday, 20 May 2016

தடாகம்

அல்லி தடாகம்
ஆளில்லாத நந்தவனம் போல்
வெறுமையாக...!

காற்று வாங்க போனேன்

கடற்கரை மணலில்
காலார நடந்து சென்று
ஓரிடம் பிடித்தமர்ந்தேன்
பால் போல் பொங்கி வந்த
கடலன்னை நான் இருக்கும்
இடம் நோக்கி மெல்ல வந்து
என் கால்களை வருடி போனாள்
நான் மெய்சிலிர்த்து போனேன்...!

Friday, 6 May 2016

இன்றைய கல்வியின் தரம் என்ன?

இன்றைய கல்வியின் தரம் என்ன?

            பக்கத்து வீட்டு பெண் +2 exam English (I)  paper எழுதிவிட்டு வந்துச்சு "என்னப்பா exam easy யா..? என்றேன்.  கொஞ்சம் கஷ்டம் அக்கா நான் படிச்ச essay வரல second lesson இருந்து வந்திருக்கு எங்க மிஸ் அதை படிக்க சொல்லல நாங்களும் படிக்கல இப்ப நானா எழுதி  வைச்சேன் னு சொன்னுச்சு. என்னப்பா சொல்ற எப்பவும் first 5 lesson ம் last 2 lesson ம் படிக்க சொல்வாங்களே என்றேன். எங்க மிஸ் அப்படி சொல்லலக்கா... என்றது நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்த பெண் அரசு பள்ளியில் படிக்கும் போது 10th school second வந்துச்சு உடனே அந்த பெண் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் +1- +2 சேர்ந்துச்சு ஏன்னா அங்கதான் நல்ல class எடுக்குறாங்களாம். இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பாடத்தை இரண்டு வருடம் படிக்கிறார்கள் அப்படி படித்தும் இரண்டாவது பாடத்தில் வந்த essay யை எழுத முடியவில்லை இதுதான் தனியார் கல்வி.

Tuesday, 3 May 2016

கனவு / மினி கதை




     நள்ளிரவு.... கத்தியோடு ஒரு உருவம் தன்னை நெருங்கி வருவதைக் கண்டு "யாராவது என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க...ப்ளீஸ் என்னை விட்டுரு ஒன்னும் செஞ்சிராதே..." கத்தினான் வேலு.

         அந்த உருவம் மெல்ல நெருங்கி வருகிறது இவனுக்கு நாக்கு குழறுகிறது...கால்கள் ஓட முடியாமல் நடுங்குகிறது குரலெடுத்து கத்துகிறான் சத்தம் வெளியே வரவில்லை.

வோட்டுக்கு துட்டு / மினி கதை



            "ப்ரியாம்மா.... ப்ரியாம்மா... "

            " என்ன ஆன்டி " ப்ரியா வெயியே வந்து கேட்டாள்.

            " அம்மா எங்கே...? ஒரு ஆளு பைக்ல வந்தாரு நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தாரு எதிர்த்த வீட்டுக்கு போறதுக்கு வழிக்கேட்டாரு நானும் சொன்னேன். அவரு வோட்டுக்கு பணம் கொடுக்க வந்தவராம் ஒரு வோட்டுக்கு ஆயிரமாம் அவங்க வீட்டுல ஒரு ஓட்டுதான் ஆயிரம் ரூபா கொடுத்தாராம். எங்க வீட்டுல நாலு வோட்டு எங்களுக்கு கொடுக்கல உங்க வீட்டுல இரண்டு வோட்டு உங்களுக்கும் கொடுக்கல. எங்களுக்கு கொடுக்கலன்னாலும் பரவாயில்லை பாவம் நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்க உங்களுக்கு கொடுத்திருக்கலாம் இல்ல, ஆள்பார்த்து ஆள் கொடுக்குறான் எந்த கட்சிகாரன்னு தெரியல " ரொம்ப ஆதங்கப்பட்டார் பக்கத்து வீட்டு ஆன்டி.

Saturday, 23 April 2016

எனது நண்பன் என் வழிகாட்டி

          இன்று புத்தகத் தினம் நான் அடிக்கி வைத்திருந்த புத்தகங்கள் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தன, என்னை இப்போதெல்லாம் சீண்டுவது இல்லையே என்னை மறந்து விட்டாயே ஆன்லைனில் எல்லாம் படித்துக் கொள்கிறாய் என்னை மறந்து விட்டாயே எனச் சொல்வது போல் இருந்தது. உடனே அதை சரி செய்து ஒரு போட்டோ எடுத்தேன். உண்மையில் இப்போது வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது.

Wednesday, 13 April 2016

சித்திரை தமிழ் புத்தாண்டு

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு
சீறும் சிறப்பு பெற்றிட
இல்லங்கள் இன்பமாய் மகிழந்திட
உள்ளங்கள் வெல்லமாய் இனித்திட
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Sunday, 20 March 2016

கோபம் யாருக்கெல்லாம் வருகிறது?

            சட்டென கோபம் யாருகெல்லாம் வருகிறது? ஒரு சின்ன சிந்தனை ஒரு ஆய்வு என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

             இதிகாசங்களில் நாம் படித்திருப்போம் வசிஷ்டர் முனிவர், துறுவாசர் போன்ற முனிவர்களுக்கு அதிக கோபம் வரும் இவர்களின் சாபங்களுக்கு ஆளாக கூடதென்று கடவுள்கள் பயந்தாக படித்திருக்கிறோம். கடவுளே பயப்படுகிறார்கள் என்றால் என்னவாக இருக்கும்? அத்தனை சக்தி அந்த முனிவருக்கு உண்டா? என்று நமக்கு சந்தேகம் எழும். சக்தி உண்டு ஏனென்றால் அவர்களின் தவவலிமைதான் அந்த சக்தி. தான் எடுத்துக்கொண்ட செயலில் உள்ள பவித்திரத்தன்மைதான் அது அதாவது உதாரணத்திற்கு நான் பொய் சொல்ல மாட்டேன் என்று ஒருவர் உறுதியோடு இருந்தால் அவர் வாக்கு பழிக்கும். ஏனெனில் அந்த பவித்திரத்தன்மை சக்தியாக மாறுகிறது. இதுதான் கடவுள், இதுதான் நம்பிக்கை, இதுதான் சாமி நாம் மேற்கொண்ட கொள்கைகள் மீது நாம் எடுத்துக்கொள்ளும் அதீத சிரத்தை தான் கடவுள்.

Thursday, 17 March 2016

இயற்கையிடம் கற்றுக்கொள்வோம்

இயற்கையிடம் கற்றுக்கொள்வோம் செய்நன்றி அறிதலை :


                ஒரு செடிக்கு நீர் ஊற்றினால் செடி நிறையபூக்களைத் தருகிறது...
ஒரு தென்னை மரத்திற்கு நீர் ஊற்றினால் இளநீர், தேங்காய், மட்டை, பாலை, என வகைகளில் பயன்படுத்துவதற்கு உதவுகிறது...

Sunday, 6 March 2016

நட்பில் பிரச்சினை வர காரணம் என்ன?

மன ரீதீயில் ஓர் அலசல்:

              முன்பு கடிதம் என்ற ஒரு அழகான மனஉணர்வு இருந்தது. படிக்கும் போதே அடடா என்று தோன்றும், இந்த கடிதம் முடியாமல் நீண்டு கொண்டே போகாதா என்று தோன்றும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் இந்த கடிதம் எழுதிமாதங்கள் ஆகலாம், வாரங்கள் ஆகலாம், நாட்கள் ஆகலாம் இருப்பினும் ஏக்கத்தோடு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே தவிர கோபமோ அதனால் சண்டையோ பிரச்சினையோ இருக்காது. காரணம் கடிதம் கிடைத்து படிக்காமல் கூட இருக்கலாம், வேலையாக இருக்கலாம், பதில் எழுத பிடிக்காமல் கூட இருக்கலாம், அதனால் எந்த பிரச்சினையும் வருவதில்லை ஏனெனில் அவர் எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறார் என்று தெரியாது என்பதால். அடுத்து குறுஞ்செய்தி அதாவது SMS ஒன்று வந்தது அதுவும் கிட்டதட்ட கடிதம் போன்ற ஒரு உணர்வை தந்தது. இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை ஏனெனில் இதற்கும் பதில் உடனடியாக அனுப்பலாம் அல்லது சற்று தாமதமாக கூட அனுப்பலாம் இதிலும் பிரச்சினை வராது.

Saturday, 5 March 2016

தஞ்சாவூர் ஸ்பெஷல் / சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1
சுண்டைக்காய் (பச்சை) - 1 கைப்பிடி
தக்காளி - 2
பூண்டு - 1
சின்னவெங்காயம் - 25 கிராம்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லித்தூள் - தேவைக்கேற்ப
வெந்தயம் - சிறிது
சோம்பு - 1 ஸ்பூன்
புளி - எழிமிச்சை அளவு
தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

Thursday, 4 February 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேன் சிந்தும் நேரம் :


பாடல்கள்                                                 படம்
1. அடி போடி பைத்தியக்காரி - தாமரை நெஞ்சம்
2. அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன் - அன்புக்கு ஓர் அண்ணன்
3. அடியே ஏன்டி அசட்டுப் பெண்ணே - கன்னிப்பெண்
4. ராஜாத்தி கூந்தலுக்கு - சிரித்த முகம்
5. என்னடி செல்லக்கண்ணு - தேன்மழை
6. வாடி தோழி கதாநாயகி - ???
7. மயக்கத்தை தந்தவன்  யாரடி - பொம்மலாட்டம்

Sunday, 24 January 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளின் நிகழ்ச்சி தொகுப்பு

                   முந்தைய பதிவில் 2007 ஒலிபரப்பான பாடல்களை பதிவு செய்தேன். இந்த பதிவில் 2008 ல் நிகழ்ச்சிக்கு வந்தவைகளில் சில  தென்றலில் அதிகாலையில் கீதாஞ்சலி என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளியன்றும் அறிவிப்பாளர் வரும்போது அவர் தொகுத்த சில பாடல்கள்.  04.07.2008  வெள்ளி

Friday, 22 January 2016

ஊரும் பேரும்

               காணும் பொங்கல் அன்று ஒரு வேலையாக  நான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு சென்றேன். அத்திவெட்டி மறவக்காடு பெரும் கிராமம் சுத்துப்பட்டு 18 கிராமங்களை கொண்டது. பஸ்காக காத்திருந்து பிறகு நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்து நானும் அம்மாவும் நடந்து சென்றோம். நான்  1 முதல் 5 வரை அந்த கிராமத்து பள்ளியில் தான் படித்தேன். பிறகு நல்ல படிப்புக்காக டவுன் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அப்போது 4 பஸ் மட்டுமே அந்த கிராமத்திற்கு செல்லும் அடிக்கடி பஸ் போக்குவரத்து கிடையாது பட்டுக்கோட்டை செல்ல வேண்டுமென்றால் காத்திருந்துதான் போக வேண்டிருக்கும் பள்ளிக்கு செல்லும் போது நிறைய தடவை பஸ்சை தவரவிட்டு பிறகு அம்மா வந்து அழைத்து செல்வார்கள். இப்போதும் அது மாறவே இல்லை என்று தெரிகிறது 20 வருடங்களுக்கு பிறகும் இன்னும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. அங்கே இருந்த கடைகள், வீடுகள் எதிலும் எந்த மாற்றமும் இல்லை அதே சாலையில் நான் நடந்து செல்லும் போது சிறுகுழந்தையாக பள்ளிக்கு சென்ற நினைவு வந்தது. நான் வளர்ந்திருக்கிறேன் அந்த ஊர் வளரவே இல்லை.

Sunday, 10 January 2016

சட்ட மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்ய போவது என்ன

            இப்போது பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயம் வருகின்ற சட்ட மன்ற தேர்தல். இதுவரை இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டு வாங்கிய அரசியல் கட்சிகள் இனி விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் விழித்துக்கொண்டார்கள் அவர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை நல்ல தார்சாலைகள், நீர்நிலை ஏரிகளை ஆழப்படுத்துதல், பாலங்கள் அமைத்தல், பள்ளி, சுகாதாரநிலையம் போன்ற அத்தியவாசிய திட்டங்கள்தான் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.

Thursday, 7 January 2016

காலம் மாறிப்போச்சு

பள்ளியில் ஆசிரியர் வகுப்பு வராத நேரங்களில் வட்டமாக உட்கார்ந்து அன்று பார்த்த சினிமாவை எகோ சவுண்ட், பைட், பாட்டு என 21/2 மணி நேர படத்தை நீட்டி சொன்ன காலங்கள் மாறிப்போச்சு..!

Tuesday, 5 January 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு

            இந்த 2016 ல் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது சட்டென ஒன்று என் நினைவுக்கு வந்தது.  கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நேரங்களில் நமக்குப் பிடித்த விஷயங்களை குறிப்பிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை.