Thursday 17 March 2016

இயற்கையிடம் கற்றுக்கொள்வோம்

இயற்கையிடம் கற்றுக்கொள்வோம் செய்நன்றி அறிதலை :


                ஒரு செடிக்கு நீர் ஊற்றினால் செடி நிறையபூக்களைத் தருகிறது...
ஒரு தென்னை மரத்திற்கு நீர் ஊற்றினால் இளநீர், தேங்காய், மட்டை, பாலை, என வகைகளில் பயன்படுத்துவதற்கு உதவுகிறது...


                ஒரு விவசாயி தனது நிலத்தில் சிறு விதைகளையிட்டால் பல மடங்கு விளைச்சலைத் தந்து மகிழ்விக்கிறது...

               ஒரு நாய்க்கு பிஸ்கட் , பால் கொடுத்தால் வாழ்நாளெல்லாம் நன்றியோடு நம் காலைச்சுற்றி வந்து சுயநலமில்லாத அன்பைக் காட்டி அடிமைபோல் கிடக்கிறது...

               ஒரு கோழிக்கு இரையிட்டால் அதற்கு நன்றி கடனாக நமக்கே இரையாகிறது...

                 பாழாய்போன மனிதன் மட்டும்தான் கிடைத்த வரைக்கும் இலாபம் என்று வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்க கூட தவறி விடுகிறான். அது அன்போ, பாசமோ எதுவாக இருந்தாலும் திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அறிவுள்ள சில மனிதனுக்கு இல்லாமல் போகிறது.

No comments:

Post a Comment