Sunday, 20 March 2016

கோபம் யாருக்கெல்லாம் வருகிறது?

            சட்டென கோபம் யாருகெல்லாம் வருகிறது? ஒரு சின்ன சிந்தனை ஒரு ஆய்வு என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

             இதிகாசங்களில் நாம் படித்திருப்போம் வசிஷ்டர் முனிவர், துறுவாசர் போன்ற முனிவர்களுக்கு அதிக கோபம் வரும் இவர்களின் சாபங்களுக்கு ஆளாக கூடதென்று கடவுள்கள் பயந்தாக படித்திருக்கிறோம். கடவுளே பயப்படுகிறார்கள் என்றால் என்னவாக இருக்கும்? அத்தனை சக்தி அந்த முனிவருக்கு உண்டா? என்று நமக்கு சந்தேகம் எழும். சக்தி உண்டு ஏனென்றால் அவர்களின் தவவலிமைதான் அந்த சக்தி. தான் எடுத்துக்கொண்ட செயலில் உள்ள பவித்திரத்தன்மைதான் அது அதாவது உதாரணத்திற்கு நான் பொய் சொல்ல மாட்டேன் என்று ஒருவர் உறுதியோடு இருந்தால் அவர் வாக்கு பழிக்கும். ஏனெனில் அந்த பவித்திரத்தன்மை சக்தியாக மாறுகிறது. இதுதான் கடவுள், இதுதான் நம்பிக்கை, இதுதான் சாமி நாம் மேற்கொண்ட கொள்கைகள் மீது நாம் எடுத்துக்கொள்ளும் அதீத சிரத்தை தான் கடவுள்.


             நீங்கள் பெரும்பாலும் பார்த்தாலே தெரியும் முற்றும் துறந்த முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், ஞானிகள் இவர்களுக்குதான் அதிக கோபம் வரும். ஏன் தெரியுமா? நாம் சரியாக இருக்கின்றோம் என்ற அகந்தை, நம்மை யாராவது சுட்டுவிரல் காட்டி ஏதாவது சொல்லிவிட்டால் கோபம் சுள்ளென்று வந்துவிடும். நேர்மையாக இருப்பவர்கள் பெரும்பாலும் கோபப்படுவர்களாக தான் இருப்பார்கள். ஏனென்றால் மற்றவர்களை விட நான் நேர்மையாக இருக்கிறேன் என்னைப்பார்த்து அவர்கள் என்ன குற்றம் சுமத்துவது? நான் உண்மையா இருக்கிறேன் நான் சரியாக இருக்கிறேன் என்ற ஆணவம். அந்த ஆணவம் தலைக்கு ஏறும்போது கோபம் வருபது இயல்பு. நேர்மையான ஆசாமிடம் சிறு பொய்கூட சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது. அதையே ஒரு பிரச்சனையாக்கி விடுவார்கள்.

                  நேர்மையா இருக்கனும் என்று சொல்வார்கள் ஆனால் அந்த நேர்மையானவர்களை இந்த சமூக ஏற்றுக்கொள்வதில்லை. அவனை தன்னோடு சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள் . காரணம் அவன் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதால் நேர்மையானவன் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பான் ஏனெனில் அவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்பதை பின்பற்றி வருகிறான். அதில் எது சரி எது தவறு என்று அவனுக்கு தெரியும் அப்போது அவன் குறை சொல்லதான் தோன்றும். நேர்மையானவர்களோடு இருப்பது பலருக்கு கஷ்டம்தான் அதனால் பலர் அந்த நேர்மையானவனைக் கண்டு ஒதுங்கி செல்வார்கள் என்னவோ துஷ்டனைக் கண்டதுபோல், அதைக் காணும் அந்த நேர்மையானவனுக்கு நிச்சயம் கோபம் வரத்தானே செய்யும். நேர்மையானவன் என்னவோ கெட்டவனை போல சித்தரிக்கப்படுகிறார்கள். என்னடா நாம் நேர்மையா இருப்பது ஒரு குற்றமா? என வருத்தப்படுவார்கள் மனம் நொந்து போவார்கள். இதுவே நண்பர்கள் வட்டத்திலும் உறவுகள் வட்டத்திலும் மனக்கசப்பை உண்டாக்கும் இதனால் பிரிந்து சென்றவர்கள் ஏராளம்.நேர்மையாக, நியாயமாக இருப்பது எத்தனை கஷ்டம் என்பது அதை அனுபவித்து வருபவர்களுக்குப் புரியும். 

           கோபப்படுவர்கள் நேர்மையானவர்களாக இருந்தாலும் அவர்களும் ஒருவகையில் ஞானிகளே... நேர்மை மட்டுமல்ல எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் இருந்தால் அதுவே ஒரு தவம்தான். ஆக நேர்மை கோபத்தை ஏற்படுத்தும் என்பது முற்றிலும் உண்மை.

இதைப் படிப்பர்கள் இதில் இருக்கும் உண்மையை உணர்ந்தால் இவை சரியென நீங்கள் நினைத்தால் கருத்திடுங்கள்.

No comments:

Post a Comment