Saturday, 5 March 2016

தஞ்சாவூர் ஸ்பெஷல் / சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1
சுண்டைக்காய் (பச்சை) - 1 கைப்பிடி
தக்காளி - 2
பூண்டு - 1
சின்னவெங்காயம் - 25 கிராம்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லித்தூள் - தேவைக்கேற்ப
வெந்தயம் - சிறிது
சோம்பு - 1 ஸ்பூன்
புளி - எழிமிச்சை அளவு
தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

                 முருங்கைக்காய் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுண்டைக்காயை லேசாக கீறி கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். தேங்காயை சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

               இப்போது கடையை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, சுண்டைக்காய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், முருங்கைகாய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும், அரைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும்.

இப்போது சுவையான மணமான சுண்டைக்காய் குழம்பு ரெடி.

3 comments:

  1. ithaivida thanjavur mango meen kulammbu, thanjavur naatukozhi kulambu.thnjavur oil illatha mutton pirattal miga arumaiyaga irukkum.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி.... அதெல்லாம் ஏற்கனவே போட்டாச்சு...

    ReplyDelete