நள்ளிரவு.... கத்தியோடு ஒரு உருவம் தன்னை நெருங்கி வருவதைக் கண்டு "யாராவது என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க...ப்ளீஸ் என்னை விட்டுரு ஒன்னும் செஞ்சிராதே..." கத்தினான் வேலு.
அந்த உருவம் மெல்ல நெருங்கி வருகிறது இவனுக்கு நாக்கு குழறுகிறது...கால்கள் ஓட முடியாமல் நடுங்குகிறது குரலெடுத்து கத்துகிறான் சத்தம் வெளியே வரவில்லை.
அந்த உருவம் கண்களை உருட்டி கோவத்தோடு கத்தியால் ஒரே குத்தாக இவன் வயிற்றில் குத்துகிறது. இவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே விழுகிறான். விழுந்தவன் திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வயிற்றை தடவிபார்க்கிறான் "ச்சே.... கனவு "
No comments:
Post a Comment