"ப்ரியாம்மா.... ப்ரியாம்மா... "
" என்ன ஆன்டி " ப்ரியா வெயியே வந்து கேட்டாள்.
" அம்மா எங்கே...? ஒரு ஆளு பைக்ல வந்தாரு நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தாரு எதிர்த்த வீட்டுக்கு போறதுக்கு வழிக்கேட்டாரு நானும் சொன்னேன். அவரு வோட்டுக்கு பணம் கொடுக்க வந்தவராம் ஒரு வோட்டுக்கு ஆயிரமாம் அவங்க வீட்டுல ஒரு ஓட்டுதான் ஆயிரம் ரூபா கொடுத்தாராம். எங்க வீட்டுல நாலு வோட்டு எங்களுக்கு கொடுக்கல உங்க வீட்டுல இரண்டு வோட்டு உங்களுக்கும் கொடுக்கல. எங்களுக்கு கொடுக்கலன்னாலும் பரவாயில்லை பாவம் நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்க உங்களுக்கு கொடுத்திருக்கலாம் இல்ல, ஆள்பார்த்து ஆள் கொடுக்குறான் எந்த கட்சிகாரன்னு தெரியல " ரொம்ப ஆதங்கப்பட்டார் பக்கத்து வீட்டு ஆன்டி.
" நல்ல வேளை ஆன்டி அவர் தப்பிச்சுட்டார் என்கிட்ட பணம் கொடுத்திருந்தால் நான் வாங்கியிருக்க மாட்டேன். நம்ம வோட்டை பணத்துக்காக விற்க முடியுமா என்னோட உரிமை அது . ஆஹா.... எலக்ஸ்ஷன் கமிட்டிக்கு கால் பண்ணி மாட்டிவிட்டுருப்பேன் அவரு போனபிறகு வந்து சொல்றீங்களே ஆன்டி "
அந்த ஆன்டி என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "நான் யாருக்கும் வோட்டுபோட மாட்டேன் எங்க பிள்ளைகளும் வோட்டு போடாது நாம என்ன இளிச்சவாயா...?" என சத்தம் போட்டப்படி பக்கத்துவீட்டை நோக்கி நகர்ந்தார் அந்த ஆன்டி.
No comments:
Post a Comment