Friday, 20 May 2016

காற்று வாங்க போனேன்

கடற்கரை மணலில்
காலார நடந்து சென்று
ஓரிடம் பிடித்தமர்ந்தேன்
பால் போல் பொங்கி வந்த
கடலன்னை நான் இருக்கும்
இடம் நோக்கி மெல்ல வந்து
என் கால்களை வருடி போனாள்
நான் மெய்சிலிர்த்து போனேன்...!



கடற்கரையில் சந்தோஷத்தை
கடன் வாங்க வந்தவர்களெல்லாம்
கைதட்டி ஆரவாரம் செய்து
சிரித்து மகிழ்ந்திருந்தார்கள்
நாகம் போல் சீறீவந்த
கடலலை கரை வந்தததும்
பனிபோல் படர்ந்து போகிறது
ஆஹா என்ன விந்தை - பெண்கள்
யார் மீதோ உள்ள கோபத்தை
யாரிடமோ காட்டி விட்டு போவது போல்
கரையை கடந்து போகிறது...!

தூரத்தில் நோக்கினால்
கடலும் வானமும் ஒன்று - அதில்
எத்தனை போராட்டங்கள்
எத்தனை கூச்சல்கள்
எத்தனை இரைச்சல்கள் - இவை
அத்தனையும் கடந்து இதமாக
காற்று வீசி போகிறது கடல்...!

No comments:

Post a Comment