Friday 6 May 2016

இன்றைய கல்வியின் தரம் என்ன?

இன்றைய கல்வியின் தரம் என்ன?

            பக்கத்து வீட்டு பெண் +2 exam English (I)  paper எழுதிவிட்டு வந்துச்சு "என்னப்பா exam easy யா..? என்றேன்.  கொஞ்சம் கஷ்டம் அக்கா நான் படிச்ச essay வரல second lesson இருந்து வந்திருக்கு எங்க மிஸ் அதை படிக்க சொல்லல நாங்களும் படிக்கல இப்ப நானா எழுதி  வைச்சேன் னு சொன்னுச்சு. என்னப்பா சொல்ற எப்பவும் first 5 lesson ம் last 2 lesson ம் படிக்க சொல்வாங்களே என்றேன். எங்க மிஸ் அப்படி சொல்லலக்கா... என்றது நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்த பெண் அரசு பள்ளியில் படிக்கும் போது 10th school second வந்துச்சு உடனே அந்த பெண் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் +1- +2 சேர்ந்துச்சு ஏன்னா அங்கதான் நல்ல class எடுக்குறாங்களாம். இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பாடத்தை இரண்டு வருடம் படிக்கிறார்கள் அப்படி படித்தும் இரண்டாவது பாடத்தில் வந்த essay யை எழுத முடியவில்லை இதுதான் தனியார் கல்வி.



            சரி வேறு தனி திறமைகள் இருக்கிறதா எனக்கேட்டால் அதுவும் இல்லை அந்த பள்ளியில் படிப்பு... படிப்பு... படிப்பு... இதை தவிர வேறு ஒன்றுமில்லையாம் அப்படி படித்தும் கல்வியில் போதுமான முன்னேற்றம் இல்லையே இது யாருடைய தவறு. தனியார் பள்ளிகளின் முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பதே. இந்த அரசு பள்ளியில் படித்து இருந்தால் பணம் செலவு இல்லாமல் அதிக மதிப்பெண் எடுத்திருக்கலாம் இப்ப தனியார் பள்ளியில் சேர்ந்து 2 இலட்சம் செலவு செய்தது மட்டுமல்லாமல் போதுமான கல்வியும் இல்லாமல் போச்சு.

          சென்னையில்   CBSE ல படிச்சா பாடங்கள் அதிகமாம் guide book வாங்கி படிக்கிறதுக்கு அதிக பணமாம். இதில் டியூசன் வேறு போகனுமாம் அதற்கு பணம் எவ்வளவு தெரியுமா...? 9th 2500/- 10th 4500/- ம் நல்லா படிக்கனும் என்பதால் தானே நாம நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். பிறகு எதற்கு CBSE ல படிக்கிற பசங்களுக்கு டியூசன்?.   அங்குதான் தரமான கல்வி கிடைக்குதுன்னு சொல்றாங்களே பிறகு ஏன் இந்த டியூசன். முன்பு நான் படிக்கும் போது டியூசன் போறேன்னு சொன்னா என்ன சொல்வாங்க தெரியுமா?  நீ மக்கா... என்பார்கள். அதாவது பாடத்தில் அதிகம் கவனம் செலுத்தாமல் குறைவான மதிப்பெண் வாங்குகிறவர்களைதான் டியூசனுக்கு அனுப்புவார்கள் இப்போது எல்லாமே தலைகீழாக இருக்கிறது.

               அரசாங்க வேலை வேண்டுமென்று ஆசைப்படும் பெற்றோர்கள் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க ஏன் தயங்குகிறார்கள்? பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் திறமையானவர்களாக வருவார்கள் சுயமாக சிந்திக்கும் திறனை பெறுவார்கள்.  ஒரு பாடத்தை ஒரு வருடம் படித்து அதிக மதிப்பெண்களை எடுக்க வைக்கும் அரசு பள்ளி முக்கியமா அல்லது ஒரு பாடத்தை இரண்டு வருடம் படிக்க வைத்து உங்க பிள்ளைகளை மக்கு பிள்ளைகளாக்கும் தனியார் பள்ளி முக்கியமா?  உங்கள் பிள்ளைகள் புத்திசாலி என்றால் அரசு பள்ளியில் சேருங்கள் அறிவு வளரும். பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு  கிடைக்கும்.


               

No comments:

Post a Comment