Thursday 7 January 2016

காலம் மாறிப்போச்சு

பள்ளியில் ஆசிரியர் வகுப்பு வராத நேரங்களில் வட்டமாக உட்கார்ந்து அன்று பார்த்த சினிமாவை எகோ சவுண்ட், பைட், பாட்டு என 21/2 மணி நேர படத்தை நீட்டி சொன்ன காலங்கள் மாறிப்போச்சு..!



திருவிழாவில் கண்விழித்து பார்த்த சினிமாவை விடுமுறை நாட்களில் சிறு பிள்ளைகள் ஒன்றாக கூடி கதையளந்த காலங்கள் மாறிப்போச்சு..!

பள்ளி முடிந்து வந்ததும் அங்கு நடந்தவகைகள் அத்தனையும் ஒன்றுவிடாமல் வீட்டில் சொல்லி சிரித்த காலங்கள் மாறிப்போச்சு..!

இப்போது சினிமா பார்த்தாலும், நாவல்கள் படித்தாலும், பள்ளி கல்லூரிகளில் நடந்தவற்றை எல்லாம் நாம் தொலைக்காட்சியில் விமர்சனமாக, விவாத மேடையாக பேசுவதைதான் பார்க்கிறோம். அல்லது பேஸ்புக் ,வைபர், வாட்ஸ்அப், டுவிட்டர் இவைகளில்தான் நாம் அவற்றை பகிர்ந்து கொள்கிறோம். நேரில் பார்த்தாலும் ஏய் ஆன் லைன்களுக்கு வா பேசுவோம் னு சொல்ற காலமா மாறிப்போச்சு..!

இன்னும் சில நாட்களில் வாய்ப்பேச்சுக்கள் குறைந்து ஆன்லைனிலே நமது வாழ்க்கை அடங்கிப் போய்விடப் போகிறது. கல்யாணம், காதுகுத்து, மரணம், ஜனனம், எல்லாவற்றுக்கு ஆன்லைனிலே வாழ்த்துச் சொல்லி மனிதர்கள் இயந்திரமாக வாழப்போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.


No comments:

Post a Comment