உறவினர் மூலமோ, தெரிந்தவர் மூலமோ, நண்பரின் மூலமோ கிடைக்கின்ற வேலை என்றுமே நிறந்தரமில்லாததது.
உன் திறமைக்கு உனக்கு வேலையில்லை உனக்குத் தெரிந்தவரின் திறமைக்கே உனக்கு வேலைக்கிடைத்திருக்கிறது.
நீ முதுகெலும்பில்லாத விலங்கா என்ன இல்லையே பிறகு ஏன் அடுத்தவர்களின் சிபாரிசில் நிற்கிறாய்.
எத்தனையோ பேர் திறமையை நம்பி காத்திருக்கிறார்கள் நீ அவர்கள் திறமையை மட்டுமல்ல உனது திறமையும் தெரியாமலே இருக்கிறாய்..
உன்னை நம்பு உன்னை மட்டுமே நம்பு வாய்ப்புகளைத் தேடு அதற்கான முயற்சியில் இறங்கு . பிறகு உன்னை நிலைநிறுத்திக் கொள். அடுத்தவர் திறமையிலும், நிழலிலும் ஒதுங்க நினைக்காதே அது உனக்கே அசிங்கம்.
உனது கண்ணால் பார்க்கிறாய், உனது வாயால் பேசுகிறாய் பிறகு ஏன் அடுத்தவர் கால்களில் நிற்கிறாய். நீ என்ன ஊனமா? இல்லையே உனது சொந்த கால்களில் முதலில் நிற்க பழகிக்கொள்.
நாம் வாழ்கின்ற வாழ்க்கையின் பாதை மிக நீளமானது கரடு முரடானது அதில் நடக்க பழக வேண்டும். ஏதோ ஒரு வண்டி துணைக்கு வருகிறது என்று அதில் பயணம் செய்ய நினைத்தால் அந்த வண்டி எல்லா நாளும் உனக்கு வராது.
நீ காத்திருக்கிற வண்டி ஒருவேளை தன் ஆயுளை இழந்தால் நீ காத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். இன்னொரு வண்டி வரும் வரை கல்லோ, முல்லோ இறங்கி நட அந்த வலி வாழ்க்கைக்கு வழிக்காட்டும்.
அதோ பார் கிழக்கு விடியலை நோக்கி
No comments:
Post a Comment