Thursday, 28 July 2016

வனத்தில் சிக்கிய மனம் / தொடர்

               தஞ்சையோ, தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிறந்தவர்களுக்கு மற்ற ஊர்களுக்கு செல்ல பிடிக்காது அத்தனை விருப்பம் இருக்காது. அதற்கு காரணம் இருக்கிறது ஏனெனில் இங்கே உள்ள சூழல் அப்படி. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடுகின்ற தஞ்சை அல்லவா... காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களுக்கு மற்ற ஊர்களின் தண்ணீர் வேம்புதான். அதுமட்டுமல்ல கலாச்சாரமுமஹ, பண்பாடு, பாரம்பரியம் என்ற மண் சார்ந்த மனிதர்கள் அத்தனை எளிதில் மனம் மாற இயலாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.. தஞ்சையை விட்டு போகக்கூடாது என்றிருந்தேன் காலத்தின் சூழல் என்னை சென்னை கொண்டு வந்து சேர்த்தது.


                பரபரப்பு நிறைந்த ஊர் இது இருப்பினும் தஞ்சையில் பகுதிகளில் வசித்தவர்களுக்கு அது எத்தனை பெரிய நகரத்திற்கு சென்றாலும் அது சாதாரணம்தான். அதோடு சுயநலமிக்க ஊராச்சே நமக்கு அது ஒத்துவருமா நினைக்கையில் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பலவித சிந்தனையோடு நான் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னையில் இறங்கி நான் சேர வேண்டிய இடத்திற்கு செல்ல மற்றொரு பஸ்சில் ஏறி பயணித்தேன். மனதில் என்னனவோ எண்ணங்கள் மனதில் ஓட சட்டென்று ஒரு இடத்தில் என் கண்கள் விரிந்தது... எம்பெருமான் சிவபெருமான் பல்லக்கில் வீதி உலா வந்துகொண்டு இருந்தார், ஒரு நொடியில் என் கண்களில் சிறுதுளி எட்டிபார்த்தது. தைரியமாக வா... உன்னுடன் நான் இருக்கிறேன் " என்று சொன்னதுபோல் இருந்தது.

             சற்று நேரத்தில் நான் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தேன். மனதில் ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் சென்னையில் இப்படியொரு இடமா என்று வியந்து போனேன் பார்த்த உடனே எனக்குப் பிடித்து போனது. அமைதியான இடம், அதிக வெப்பம் இல்லை, 100 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றி மரங்கள் பழமை மாறாத ஒரு வனம் போல் எனக்கு அது தெரிந்தது. சுற்றிலும் காம்பவுண் சுவர்கள் அதற்கு நடுவே பசுமை நிறைந்த மரங்களுக்கு நடுவே பழமையை சொல்லும் கட்டிடங்கள். எனக்கென்னவோ அந்த இடத்தை பார்க்கும்போது புது இடம்போல் தெரியவில்லை பழகிய இடம்போல் தெரிந்தது. இங்கேயே இருக்க வேண்டுமென்று மனம்விரும்பியது. அங்கே சென்ற சிறிது நேரத்தில் நான் உள்ளே அழைக்கப்பட்டேன். உங்களுக்கு பணி செய்ய விருப்பமா இங்கே உள்ள சூழல் பிடித்திருக்கிறதா?  என்று கேட்டார்கள் (இடம்தான் பழமை வாய்ந்தது ஆனால் ஆங்கிலம்தான் இங்கே முதன்மை ஆங்கிலேயர் வாழ்ந்த இடமல்லவா)  நான் எனது பதிலை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். மறுபடியும் பஸ் பயணம் அப்போது ஒரு இடத்தில் சற்றென்று என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அங்கே அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார் அத்தனை அழகு " நான் மறுபடியும் உன்னை காணவே ண்டும் வருவேணா எனக்கேட்டேன் "ஆலயமணி ஓங்கியடித்தது. ஆனால் அது என்ன கோவில் என்று அப்போது தெரியவில்லை. (இப்போதுதான் தெரிந்தது அது பாளையத்து அம்மன் என்று.)

                 ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு பிரதோஷ நாளில் தொலைபேசி அழைப்பு எப்போது இங்கே வருகிறீர்கள் என்று.... நான் உடனே வருகிறேன் என்றேன். சில நாட்களுக்குப் பிறகு ஒரு பவுர்ணமி தினத்தில் உத்தரவு கடிதம் வந்தது. அங்கே போவதற்கு முன் அந்த இடம் எப்படி?  அங்கு என்ன இருக்கிறது?  என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எல்லாம் எம்பெருமான் அருள் என மனம் நினைத்தது. ஆனால் அங்கே உள்ளே சென்ற பிறகுதான் ஒரு மகத்தான இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று தெரிய வந்தது. நான் வந்த இடம் ஒரு கோவில் போன்றது அங்கே உள்ளவற்றை பார்க்கும்போது இங்கே நான் வருவதற்கு ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று தோன்றியது. மெய்சிலிர்த்து போனேன் நான் இங்கே நானாக வரவில்லை ஏதோ ஒன்று நம்மை வரவழைத்திருக்கிறது என்று தோன்றியது.

கலை பொக்கிஷம்  நிறைந்த ஒரு இடம் அனுமான்ஷ்யமும் ஆன்மிகமும், சரஸ்வதியும் குடி கொண்ட ஒரு இடத்தில் நான் காலடி வைத்திருக்கிறேன் என்று சந்தோஷமடைந்தேன். ஒரு நூற்றாண்டை கடந்த ஒரு இடத்தில் புகழ்பெற்ற ஒரு பெண்மணி வாழ்ந்த இடத்தில் அவரைப்பற்றி Research செய்ய போகிறோம் செய்வோம் என்று கனவிலும் தெரியாது. அவர் பயன்படு்த்திய பொருட்கள் எல்லாம் என் கையால் தொடும்போது இதற்கெல்லாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கிட்டதட்ட ஒரு "சந்திரமுகி " அறைக்கு சென்ற உணர்வு எனக்குள்.
 

                                                     - பயணம் தொடரும்

No comments:

Post a Comment