நீ....
நடந்து வருகையில்
சாலை மரங்களெல்லாம்
பூக்களைத் தூவி
சாமரம் வீசுகிறது...!
உன் ...
பிஞ்சு பாதங்களை
பஞ்சுபோல் ஏந்திட
பூக்கள் என்ன
புண்ணியம் செய்ததோ...!
உதிர்ந்த பூக்களெல்லாம்
மெல்ல சிரிக்கிறது
உன் பாத ஸ்பரிசம் பட்டு
மோட்சம் பெற்றதால்..!
அன்பே...
உன் பாதம் தொட
எனக்கு அனுமதி கிடைக்காது
இருப்பினும் உன் பாதம் பட்ட
மலர்களை பாடமாக்கி
படமாக மாட்டப்போகிறேன்
என் இதயமென்னும் அறையில்...!
No comments:
Post a Comment