அடிக்கடி கடலில் விழுகின்ற
விமானம் போல் உன் மனக்கடலில்
விழுந்து நான் காணாமல்
போய்க்கொண்டு இருக்கிறேன் ...
எனைக் கண்டெடுக்க ஒருவேளை
நீ வந்தால் கருப்பு பெட்டியாய்
உன்னிடம் நான் சிக்குவேன்...
நீ அதை திறக்கும்போது
உண்மையை அது சொல்லும்
உன்னை நான் எவ்வளவு
நேசித்தேன் என்று...!
என்ன பார்க்கிறாய்..?
நீ தொலைத்தது என்னையல்ல
நம் நட்பை - ச்சீச்சீ ஏன் அழுகிறாய்?
மறுபடியும் என்னைத்
தொலைக்க நினைக்காதே
உன் கண்களிலிருந்து
உதிர்ந்த முத்துக்கள்
கண்ணீரல்ல அது நான்தான்...!
- துவரங்குறிச்சி வீ. சந்திரா
No comments:
Post a Comment