Thursday, 30 June 2016

நீதிமன்றமும் காவல் நிலையமும் எதற்கு?

நீதிமன்றமும் காவல் நிலையமும் இனி தேவையில்லையா...?

 ஆட்கள் நடமாடும் இரயில் நிலையத்தில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள் சுற்றியிருந்தவர்கள் யாரும் தடுக்கவில்லை, ரோந்து போலிஸ் வரவில்லை, இரயில் காவல் நிலை அதிகாரிகள் வரவில்லை, கொலை செய்தவன் போட்டோ தெளிவாக பதிவாகி இருக்கிறது போலிஸ் இன்னும் விசாரணை தான் செய்து கொண்டு இருக்கிறது கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் பொது மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று எல்லோருமே வலைதளத்திலும் தொலைகாட்சியிலும் கூறிக்கொண்டு  இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவர் சொல்கிறார் கொலையுண்ட பெண்ணின் மீது யாரும் ஒரு கர்சிப் கூட போட மனமில்லை என்று , ஒருவேளை கர்சிப் போட்டிருந்தால் இது கொலையாளி விட்டு சென்ற கர்சிப் என போலிஸ் துப்பு துலக்கும்.


பெண்களின் ஆடை விலகியிருந்தால் அங்கம் தெரிகிறதா என்று கூர்ந்து பார்த்து படம் எடுக்கும் ஆண்களின் கண்களுக்கு அந்த பெண் கொலை செய்யப்படும்போது தடுக்கவோ, படம் எடுக்கவோ துணிவு இல்லை. கோழை பசங்களுக்கு இதற்கெல்லாம் எங்கே தைரியம் இருக்க போகிறது...?சுற்றியிருந்தவர்கள் யாரெனும் ஓடிவந்திருந்தால் கூட கொலையாளி பயந்திருப்பான் இதே கிரமமாக இருந்திருந்தால் அவனை அடித்து துவைத்திருப்பார்கள். இதுதான் கிராமத்திற்கும் நகரத்திற்கும் உள்ள வி்த்தியாசம். நான் வேலையின் காரணமாக சென்னை வந்து ஊருக்கு திரும்பிய போது எங்களோடு பஸ்சில் வந்த பெண்மணி விபத்தில் இறந்து போனார். நானும் சகோதரியும் போலிஸ்க்கு போன் செய்யுங்கள், ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் என்று கத்துகிறோம் அங்கே வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் எங்களை வினோதமாக பார்க்கிறார்கள். விபத்து நடந்து இரண்டு மணி நேரம் ஆகியும் போலிஸ் வரவில்லை ஆம்புலன்ஸ்ம் வரவில்லை தாமதமாக வந்துவிட்டு பஸ்சை எடுக்க வேண்டுமென்று நாங்க சொன்ன போது உங்க அட்ரஸ் கொடுங்க நாளை நீங்கள் கோர்ட்க்கு வரும்படி இருக்கும் என்று பயம் காட்டுகிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் யார் உதவுவதற்கு முன் வருவார்கள்,? அப்போதே ஒரு பயம் வந்தது சென்னையை பார்த்து இத்தனை சுயநலமிக்கவர்களா சென்னை வாசிகள் என்று ஒருவகையில் இவர்களையும் குறை சொல்ல முடியாது நமது சட்டத்திட்டங்கள் அவ்வாறு இருக்கிறது.  காவல்துறை உங்கள் நண்பன்  என்று சொல்கிறார்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா இல்லையே... அப்புறம் எதற்கு காவல் நிலையம்,  நீதிமன்றம் எல்லாம் இழுத்து மூடுங்கள் அவரவர் தங்களை காத்து கொள்வார்கள்.

தனக்குப் பிடிக்காத ஒருவரை வஞ்சம் வைத்து கொலை செய்ய முடிமெனில் பிறகு எதற்கு காவல்? ஒரு உயிர் போன பிறகு அவனை தண்டித்து யாருக்கு என்ன பயன். இரயில் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் எங்கே போனார்கள் ரோந்து பணியில் யாருமே ஈ்டுபடவில்லையா...? பொதுமக்கள் பயந்து வரவில்லை ஆனால் போலிஸ் இவர்கள் ஏன் உடனே வரவில்லை?
இதை யாராவது கேட்டார்களா...?

பெ ண்களே .... இந்த தேசம் உங்களை காப்பாற்றாது நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் இல்லையெனில் உங்களை காப்பாற்றி கொள்ள முடிய வில்லை எனில் தன்னை காத்து கொள்ள கொலை செய்யவும் தயங்காதீர்கள். வேறு வழியில்லை ஆண்களை பொறுத்தவரை பெண்கள் ஒரு போதை பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும்தான் தெரிவாள் தேவைப்படும் வரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடும் இந்த ஆண் சமூகம். பாதுகாப்போ நீதியோ உங்களுக்கு கிடைக்காது அப்பவும் பெண்களைதான் குற்றம் சொல்வார்கள் இந்த ஆண்கள். இன்று சுவாதி நாளை நீங்களாக கூட இருக்கலாம் உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

பெண்களின் கண்ணீர் இன்னொரு பிரளயத்தை உண்டாக்கட்டும்.... பூமா தேவியே சீதையை மட்டும்தான் நீ கொண்டு செல்வாயா?  பெண்கள் அனைவரும் உன் குழந்தைகள்  இல்லையா...? அனைவரையும் கொண்டு சென்று விடு ஆண்கள் மட்டும்  இந்த உலகை ஆளட்டும். பொறுத்தது போதும் பொங்கி எழு...பெண்களுக்கு இந்த கொடூரம் நிறைந்த உலகம் வேண்டாம்.


நமது சட்டத்திட்டங்களை மாற்றும்  வரையில் இது போன்ற கொலைகள் தொடரதான் செய்யும்... அப்போது நாமும் இப்படிதான் புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோம். 

10 comments:

  1. கடைசி வரிகளை பலிக்க வைக்க வேண்டும் ???

    ReplyDelete
    Replies
    1. கடைசி வரி என்றால் புரியவில்லை சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதா சகோ....

      Delete
  2. சகோதரி படுகொலை அதிர்ச்சியானதுதான். கொலை நடந்தது காலை 6.10 மணிக்கு. இங்கு எல்லோருமே சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு போன்ற ரயில் நிலையங்களை, கோயம்பேடு பேருந்து நிலையம் போல நினைத்துக் கொள்கிறார்கள். பேருந்து நிலையத்தில் இந்த நேரத்தில் ஈ மொய்ப்பது போல ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

    ஆனால், காலை 6.30 மணி வரை ஒரு நான்கைந்து நபர்கள் மட்டுமே முழு ரயில் நிலையத்திலும் இருப்பார்கள். காலை 7.00 மணிக்குத்தான் பீக்-அவர் ஆரம்பிக்கும். அலுவலகம் போகும் நபர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள். அதனால் அந்நேரத்தில் இந்த கொலையை ஓரிரண்டு பேர்தான் பார்த்திருப்பார்கள். அலறல் கேட்டு தள்ளி நின்றவர்கள் கவனிப்பதற்குள் அவன் ஓடியிருப்பான். அதனால் கொலையை பார்த்தவர்கள் நூறு பேர் இருப்பார்கள் என மீடியா போல கதை விடாதீர்கள். ஒருநாள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் காலை ஆறு மணிக்கு வந்து கவனியுங்கள். உங்களுக்கே புரியும்.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது போல் வைத்துகொள்வோமே... 100 பேர் வேண்டாம் இரண்டு பேர் சத்தம் கேட்டு ஓடிவந்திருந்தாலே போதும் கொலையாளிக்கு கண்டிப்பாக வந்திருக்கும் அவனின் கவனம் சிதறியிருக்கும் அந்த நேரத்தில் லேசான காயத்தோடு காப்பாற்ற வாய்ப்பு உள்ளது சகோதரரே... அரை உயிராக இருக்கும் உயிரை காப்பற்ற முடியும்தானே....

    ReplyDelete
  4. காவல்துறையின் போக்கு மாறவேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு கர்ச்சிப் போட்டிருந்தால் காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவார். காவல் நிலையத்தில் நுழைந்தாலே எப்படி வரவேற்பிருக்கும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் எவ்வளவு வயசானவராயிருந்தாலும் ஒருமையில் தான் அழைக்கப்படுவார். பெரிய குற்றவாளிபோல்தான் நடத்தப்படுவார். இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

    ReplyDelete
  5. உண்மைதான். அந்தப் பெண்ணைத் தொட்டு தூக்கியிருந்தாலோ, அல்லது தண்ணீர் கொடுக்காவது கைப்பட்டு இருந்தாலோ அந்த கைரேகையை வைத்து இவன் தான் கொலையாளி என்று காவல்துறை விசாரணை செய்யும் இதற்கு பயந்தே நிறைய பேர் உதவி செய்ய பயப்படுகிறார்கள். முதலில் சட்டத்திருத்தம் வந்தாலே எல்லாம் சரியாகும் சகோதரரே....

    ReplyDelete
  6. இந்திய சட்டத்திட்டங்கள் பெரும்பாலும் கொலையாளிகளுக்கு சாதகமாகவே இருக்கிறது. இந்நிலையில் குற்றங்கள் நடக்கதான் செய்யும். கடுமையான தண்டனைகள் கிடைக்காதவரை குற்றவாளிகள் உலாவருவார்கள் நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு அனுதாபத்தை கொட்டிவிட்டு சில நாட்களில் அதை மறந்தே போய்விடுவோம்.

    ReplyDelete
  7. தங்கள் கோபம் நியாயமானதே
    வெளிப்படுத்திய விதமும்
    முடித்த விதமும் சரியானதே
    இத்தனை நாளாகியும் கொலைகாரனை
    கண்டுபிடிக்க முடியாதது
    எரிச்சலூட்டத்தான் செய்கிறது

    ReplyDelete
  8. என்ன செய்வது... யார் யாருக்கோ பாதுகாப்பிற்கு செல்லும் போலிஸ் பொதுமக்களுக்கு ஒரு ஆபத்து எனில் வருவதே இல்லை. எவனாவது மாட்டுவானான்னு விசாராணை செய்து கொண்டு இருக்கிறது. இவையெல்லாம் பார்க்கும்போது கோபம் தான் வருகிறது வேற என்ன செய்யமுடியும் ரமணி சார்...

    ReplyDelete
  9. கவர்னர் கிரேண்பேடி நமக்கு கவர்னராக வந்தால் சட்ட ஒழுங்கு சரியாகும் இல்லையா...?

    ReplyDelete