Monday, 29 September 2014

எனக்கு விருதா...? (VERSATILE BLOGGER AWARD)

      


                எனக்கு விருதா...? எனக்கு விருதா...? சந்தோசத்திலே மிகப்பெரிய சந்தோஷம் கொடுப்பதில் தான் இருக்கிறது ஆனால் அன்பு , பாசம்,பரிசு, பாராட்டு இதெல்லாம் பெறுவதிலும்  சந்தோஷம் உண்டு அந்த வகையில்  எனக்கு அளித்த (VERSATILE BLOGGER AWARD) இந்த விருதை பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்கிறேன்.



என்னைப் பற்றி


                நான் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள துவரங்குறிச்சி நான் பிறந்த ஊர் தாய் , தந்தை,சகோதரி,சகோதரன் என ஐவர் அடங்கியது எனது குடும்பம் அதில்  நான் கடைகுட்டிப் பெண். கல்வியில் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்று மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில்  மேலாண்மை இயலில் முதுநிலை பட்டம் பெற்ற (எம்.பி.ஏ ) நான் தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிகிறேன். சிறு வயது முதல் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உண்டும் அதனால் எழுதும் ஆர்வமும் ஒட்டிக்கொண்டது.


             2004- ல் இலங்கை வானொலியின் நேயர் அரங்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் எழுத தொடங்கினேன் அதன் பிறகு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என தொடர்ந்து எழுதினேன். அவ்வப்போதுபத்திரிகைக்களுக்கும் எழுதுவதுண்டு. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் நாம் ஏதாவது ஒன்றில் தனித்தன்மை பெற்றோம் என்றால் அதற்கு மறைமுகமாக யாரோ ஒருவர் காரணமாக இருப்பார் இல்லையா அந்த வகையில் எனக்கு ரோல் மாடலாக இருந்தவர் அறிவிப்பாளர் நாகபூஷணி அவர்கள் தான். அவர் எனது பிரதியை ஒலிபரப்பு செய்து ஊக்கமளித்து பாராட்டியதால்தான் இன்று என்னால் எழுத முடிகிறது.

                   இந்த நேரத்தில் அவரை நான்  நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன். மேலும் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் உண்டு எல்லாம் விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நிறைய ஆர்வம் உண்டு.சிறு வயது முதல் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.   தற்போது எழுத்து.காம் என்ற வலைதளத்தில் கவிதை, கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்னைப் பற்றி அறிமுகம் இவ்வளவுதான் மற்றபடி பெருமையாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

              இந்த வலைப்பூச்சு ஆரம்பித்து சிறிது காலம்தான் ஆகிறது 2014 - ல் ஏப்ரல் மாதம் தொடங்கினேன். இது எனக்கு கிடைத்த முதல் விருது எனது வலைப்பூச்சுக்கு விருது வழங்கிய அன்பு உள்ளம் கோவை கவி அவர்களுக்கு http://kovaikavi.wordpress.com/about/ என் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும். விருது கொடுப்பதற்கு பெரிய மனம் வேண்டும் அதை அவரும் பெற்று எனக்கும் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த விருதை நான் யாருக்கு வழங்குவது என்றுதான் தெரியவில்லை ஏனெனில் எனக்குத் தெரிந்தவர் யாருமில்லை அதனால் எனக்குத் தெரிந்தவர்களுக்கு கொடுப்பதைவிட எழுத்தால் என்னைக் கவர்ந்தவர்களுக்கு வழங்கினால் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.
குறைந்தது 5 பேருக்கு நான் கொடுக்கவேண்டுமாம் அதனால் இவர்களை  தேர்வு செய்து இருக்கிறேன் இவர்கள் இந்த விருதை ஏற்கனவே பெற்றுள்ளார்களா என்று தெரியவில்லை.

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்


1. http://sherihaan.blogspot.com - ஷெரிஹான்

2. http://muthuvin kirukkalgal.blogspot.uk - முத்துவின் கிறுக்கல்கள்

3. http://enpookkal.blogspot.com - கவி ரூபன்

4. http://rajesh-mechanica.blogspot.com - ராஜேஷ்

5. http:// brawin.blogspot.in - பிரவின்




6 comments:

  1. மென்மேலும் பல விருதுகள் - வெற்றிகள் பெற வாழ்த்துக்கள். பெறுவதை பார்கில்லும் தருவதில் இன்பன் என்றீர்களே... அதனில் தங்கள் பெருந்தன்மை தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள். தங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    www.visuawesome.com

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி.!

    விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! தொடர்ந்து எழுதி, இன்னும் பல விருதுகள் பெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. இனிய வாழ்த்து சகோதரி. தங்களைப்பற்றி அறிந்தது மகிழ்வு.
    மேலும் புகழடையுங்கள். இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.

    ReplyDelete
    Replies
    1. விருதையும்
      கொடுத்து பாராட்டையும் தெரிவித்து மகிழும் சகோதரிக்கு எனது நன்றிகள் பல..
      பல.. உங்கள் அனைவரின் ஆசி இறைவனின் ஆசியாக ஏற்று மகிழ்கிறேன். என்றும்
      இறைவழியில் நான்..!

      Delete
  4. வாழ்த்துக்களை தந்த விசு அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..!

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி... கமலா ஹரிஹரன் அவர்களே! தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி..!

    ReplyDelete