Thursday 25 September 2014

தஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லிதூள் - தேவைக்கேற்ப
தேங்காய் மூடி - 1/2 மூடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 3 பல்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிப்வேப்பில்லை - சிறிதளவு


செய்முறை

         துவரம் பருப்பு 1 மணி நேரம் ஊரை வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு, பூண்டு சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை நறுக்கிக் கொள்ளவும். துருவிய தேங்காயோடு, சோம்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

            இப்போது அரைத்த பருப்போடு 100 கிராம் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து (முருங்கை கீரையும் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்)பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து அவித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

           இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை, தக்காளி ஆகியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும் பிறகு சிறிது மஞ்சள்தூள் தைவையான மிளகாய்தூள் மல்லித்தூள், உப்பு சேர்த்து கூடவே புளிகரைசலையும் ஊற்றி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் இரண்டு கொதி வந்ததும் அவித்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை அதில் போடவும் சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து இறக்கவும்.


           இப்போது சுவையான உருண்டை குழம்பு ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வடகம், வத்தல் பொறித்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். 

2 comments:

  1. இப்படி அம்மா செய்வா.
    உருண்டையாக அல்ல தட்டில் பரப்பி
    சதுரமாக வெட்டி செய்வார்கள்.
    பழைய நினைவு கிளறியது-
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. இங்கே உருண்டையாக செய்வதுதான் வழக்கம்

    ReplyDelete