சினிமா இன்று வெறும் கவர்ச்சியை மட்டும் வைத்து படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் கவர்ச்சி நிறைந்த படங்கள் படு தோல்வி அடைந்திருக்கிறது என்று ஏன் இந்த இயக்குநர்களுக்கு புரியாமல் போனது? கவர்ச்சி இல்லாத படங்கள் தான் இன்று வெற்றியடைந்துள்ளது. உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், சாட்டை, கும்கி, வழக்கு எண் 18, அங்காடி தெரு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மைனா, தங்க மீன்கள், ராஜா ராணி, தெய்வ திருமகள், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஹரிதாஸ் போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. பாண்டியராஜ்,சமுத்திரக்கனி, சசிகுமார், சாலமன்,அட்லி போன்ற இயக்குநர்கள் ரசிகர்களின் மனதை புரிந்து படம் எடுக்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள் இவர்களை இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும்.
சரி, ரசிகர்கள் கவர்ச்சியைதான் விரும்புகிறார்கள் என்று எதை வைத்து முடிவு செய்கிறார்கள் நடிகைக்கு அரைகுறை ஆடை உடுத்தி ஏன் ஆட வைக்கிறீர்கள்? மேற்சொன்ன படங்களில் கவர்ச்சியான பாடல் காட்சி இல்லை அந்த படங்கள் வெற்றியடைய வில்லையா? கவர்ச்சி இல்லாத படங்கள், கவர்ச்சி இல்லாத பாடல்கள் தான் எல்லோருக்கும் பிடிக்கிறது இந்த மாதிரியான படங்கள் தான் மாபெரும் வெற்றியை தந்தது. நீங்கள் கவர்ச்சியான படங்களை எடுத்துவிட்டு பிறகு ஏன் படம் ஓடவில்லை என்று வருந்துகிறிர்கள் இந்த ஏமாற்றம் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சார்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும்தான்.
ரசிகர்கள் கேட்டார்களா எங்களுக்கு கவர்ச்சியான காட்சிகள் வேண்டும் என்று அதற்கு என்றுதான் தனி உலகமே இருக்கிறேதே வேண்டுமென்றால் அதை பார்த்துவிட்டு போகிறார்கள் தமிழ் சினிமாவில் ஏன் ஆபாசத்தை புகுத்துகிறீர்கள்? ஒரு தந்தை தன் மகனோடு அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை, ஒரு தாய் தன் மகளோடு அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை, ஒரு அண்ணன் தன் தங்கையோடு அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை ஏன் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு கூட படம் பார்க்க முடியவில்லை அத்தனை கூச்சமாக இருக்கிறது குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தால் பாடல் காட்சிகளில் நெளிய வேண்டியிருக்கிறது அத்தனை கேவலமாக இருக்கிறது.
இயக்குநர்களே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் கவர்ச்சியை எந்த ரசிகரும் விரும்பவில்லை அதற்கு உங்கள் தோல்வி படங்களே உங்களுக்கு உணர்த்தி விட்டது அப்படி இருந்தும் ஏன் கவர்ச்சியை நம்பி படம் எடுக்குறீர்கள்? என்று ஒரு நல்ல கதையோட எல்லோரும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படி படம் எடுக்குறீர்களோ அன்று வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.
நீங்க சொன்ன எல்லாமே correct தான். அப்புறம் ஏன் அந்த கவர்ச்சி போட்டோ ?
ReplyDelete