Wednesday, 17 September 2014

என் சமையலறையில் / மீன் வறுவல் செய்வது எப்படி?

                                     மீன் வறுவல் 

தேவையான பொருட்கள் 

 மீன் - 1/2 கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
சின்ன வெங்காயம்  - 4 ,5
மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை அல்லது தக்காளி ஜுஸ் தேவைக்கேற்ப
கேசரி பவுடர் தேவைக்கேற்ப
எண்ணெய் - 200


செய்முறை 

சோம்பு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக்கொள்ளவும். சுத்தம் செய்து நறுக்கிய மீன் துண்டுகளில் அரைத்த விழுதுகளுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி ஜுஸ், கேசரி பவுடரையும் சேர்த்து நன்கு புரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். சிறிது நேரத்திற்கு பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு மீன் துண்டுகளாக பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான மீன் வறுவல் ரெடி.


2 comments:

  1. முதல் படம் அருமை , இரண்டாவது படத்தில் உள்ள மீன் சரியாக ஜிம்முக்கு போகவில்லை போலும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எல்லா மீனும் ஒரே அளவோடு இருப்பது இல்லையே அதான் இப்படி ஆகிவிட்டது.

      Delete