மன்னை நம்பி மரம் இருக்கிறது
மரத்தை நம்பி கிளை இருக்கிறது
கிளையை நம்பி இலை இருக்கிறது
இலையை நம்பி பூ இருக்கிறது
பூவை நம்பி காய் இருக்கிறது
காயையை நம்பி கனி இருக்கிறது
கனியை நம்பி பல உயிர் இருக்கிறது - ஆனால்
இந்த உயிர் யாரை நம்பி இருக்கிறது..?
கடலை நம்பி சிப்பி இருக்கிறது
சிப்பியை நம்பி முத்து இருக்கிறது
முத்தை நம்பி வணிகம் இருக்கிறது
வணிகத்தை நம்பி மனித ஆசை இருக்கிறது - ஆனால்
இந்த உயிர் யாரை நம்பி இருக்கிறது..?
வானத்தை நம்பி சூரியன் இருக்கிறது
சூரியனை நம்பி நிலவு இருக்கிறது
நிலவை நம்பி நட்சத்திரம் இருக்கிறது
நட்சத்திரத்தை நம்பி சாஸ்த்திரம் இருக்கிறது
சாஸ்திரத்தை நம்பி ஜோதிடம் இருக்கிறது
ஜோதிடத்தை நம்பி மானுடம் இருக்கிறது - ஆனால்
இந்த உயிர் யாரை நம்பி இருக்கிறது..?
மலையை நம்பி அருவி இருக்கிறது
அருவியை நம்பி நதி இருக்கிறது
நதியை நம்பி ஆறு இருக்கிறது
ஆற்றை நம்பி விவசாயம் இருக்கிறது
விவசாயத்தை நம்பி உழவு இருக்கிறது
உழவை நம்பி உணவு இருக்கிறது
உணவை நம்பி உயிர் இருக்கிறது - ஆனால்
இந்த உயிர் யாரை நம்பி இருக்கிறது..?
அருமை
ReplyDeleteThank u mohanraj
Deleteஉன் உடலை நம்பி இருக்கிறது ...
ReplyDeleteநல்ல செயல்களும், நல்லெண்ணங்களும் போதும்
ReplyDeleteநம்மை நாமே நம்பி வாழ.
மற்றவை வாழ்வுச் சுழற்சியில்
நன்றாக நடக்கும் - மனத்துணிவு வரும்.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
Arumaiyaga azhaga sonnirgal nandri sago........
ReplyDeleteஅருமை
ReplyDeletenandri senthilkumar
ReplyDelete