கொத்தவரங்காய்
பொறியல்
தேவையான பொருட்கள்
கொத்தவரங்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய்(சிவப்பு) - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் துறுவல் - சிறிதளவு
செய்முறை
சிலருக்கு கொத்தவரங்காய் என்றாலே சுத்தமா பிடிக்காது ஏனென்றால் சிலர் பெரிது பெரிதாக நறுக்குவார்கள் சிலர் அப்படியே நீள நீளமாக போட்டு பொறியல் செய்வார்கள் அது அத்தனை சுவை தராது.
கொத்தவரங்காயை கழுவிவிட்டு எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கி உப்பு போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை மணம் வரும் வரை வதக்க வேண்டும் வதக்கிய பிறகு வேக வைத்த கொத்தவரங்காயை கொட்டி கிளறவும் அதோடு தேங்காய் துறுவலையும் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். இப்போது சுவையான கொத்தவரங்காய் பொறியல் ரெடி.

ஆஹா, இப்போதே சாப்பிடவேண்டும் போல் இருக்கிறதே ?
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த பொறியல் பார்க்கும்போதே எச்சில் ஊறுகிறது .எனக்கும் அய்யா பழனிச்சாமி அவர்களுக்கும் ஒரு பிளேட் அனுப்புங்கள்
ReplyDeleteஇப்போதே அனுப்பிட்டா போச்சு
Deleteஅப்படியா... சந்தோஷம்
ReplyDelete