Wednesday 17 September 2014

என் சமையலறையில் / பாதம் அல்வா செய்வது எப்படி?

            சமையல் ஒரு அழகான கலை அது சிலருக்கு மட்டும் கைவந்த கலை எல்லோரும் சமைக்கலாம் ஆனால் ஒரு சிலர் மட்டுமே ருசியாக சமைப்பர். ஒரு ரசத்திற்கான பொருட்களை கொடுத்து மூன்று பேரிடம் வைக்கச் சொன்னால் மணம் ஒன்றாக இருக்கும் ஆனால் ருசி வேறாக இருக்கும.

           இந்த பக்கத்தில் முதல் முறையாக சமையல் பற்றி பதிவு செய்ய போகிறேன் அதை ஒரு இனிப்போடு தொடங்கலாம். சரி வாங்க பாதம் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 பாதம் அல்வா

தேவையான பொருட்கள் 

பாதம் - கால் கிலோ
பால் - ஒரு டம்ளர்
நெய் - 200 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய் - சிறிதளவு



செய்முறை 

        பாதம் பருப்பை கொதிக்கும் வெந்நீரில் ஊரவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அடித்து எடுத்து கொள்ளவும் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.


       ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு அரைத்த பாதமை நிறம் மாறாமல் வதக்கவும். கொஞ்சம் கெட்டியானதும் காய்ச்சிய பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும் அடிபிடிக்காமல் கிளறவேண்டும்.



        பால் ஊற்றியதும் பாதம் கலவை கெட்டியாகி வரும்போது சீனியை சேர்க்கவும் சேர்த்தவுடன் கலவை தளர்ந்து விடும் மீண்டும் நன்றாக கிளறவும் இப்போது கலருக்காக தேவைப்பட்டால் குங்குமப்பூவை சேர்த்து கொள்ளலாம்.


       அல்வா சிறிது கெட்டியானதும் கொஞ்சமாக கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடவும் ஏலக்காய் பொடி சேர்த்து கைவிடாமல் கிளறி அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் போது அடுப்பை அனைத்து விட்டு நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவை கொட்டி ஆறவிடவும். இப்போது அல்வா ரெடி.

No comments:

Post a Comment