Sunday 7 September 2014

¤ சுமைகள் ¤


              சுரேஷ் அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பிகொண்டிருந்தான் ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜிங் டைரக்டர் உத்தியோகம் பார்க்கிறான்.

             "கவிதா... கவிதா... ஆபிஸ்க்கு டைம் ஆச்சு லன்ஜ்பாக்ஸ் எடுத்துட்டுவா.."

              "ஏன்ங்க இப்படி கத்துறீங்க இதோ வந்துட்டேன் அப்பப்பா அவனை கூட ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன் உங்களை அனுப்புறதுக்குள்ள போதும்போதும்ன்னு இருக்கு.."

             "என்ன அவன் ஒழுங்கா படிக்கிறானா... மார்க் ரொம்ப குறைஞ்சு இருக்கு... "

             "ஆமாங்க அவன் புக் எடுக்குறதே இல்ல சொன்னா எங்க கேக்குறான்"

             "சரிசரி நான் அவன்கிட்ட பேசுறேன் ஆங்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லயாம்    ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகச் சொன்னார் அவர் சொல்லி ஒருவாரமாச்சு எனக்கும் நேரம் கிடைக்கல சாய்திரம் அழைச்சிட்டு போறேன்னு சொல்லு"

            "ஏங்க... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க உங்க அப்பாவ ஓல்டு ஏஜ் ஹோம்ல சேர்த்துரலாங்க என்னால வச்சுகிட்டு சமாளிக்க முடியல சளி தொல்லை வேற.."

           "என்ன கவிதா சொல்ற நீ என்னை பெத்த பாவத்த தவிர வேற என்ன பாவம் செஞ்சாங்க இங்கேயே ஒரு மூலையில இருந்துட்டு போகட்டுமே..."

          "இங்க பாருங்க உங்ககிட்ட எத்தனையோ தடவை சொல்லியாச்சு நீங்க கேக்குறதா இல்ல இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது இங்க சும்மாதானே இருக்காங்க அத அங்க போய் இருக்கட்டுமே அவங்களும் நல்லா கவனிச்சுப்பாங்க மாசம் மாசம் பணம் அனுப்பிறளாம்..."

          "சரி சரி சாய்ந்திரம் ஒரு முடிவடு வர்றேன்..."

          மறுநாள் மனைவியின் ஆலோசனைப்படி அப்பாவை ஓல்டு ஏஜ் ஹோம்ல சேர்த்துவிட்டான்.

          வருடங்கள் நகர்ந்தன மகன் அருண் ஒருநாள் திடீரென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான் சுரேஷ்க்கும் கவிதாவுக்கும் அதிர்ச்சி

            "என்னப்பா... இப்படி செஞ்சிட்ட பெத்த எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல..."

           "என்னப்பா... சொல்றீங்க யார்கிட்ட சம்மதம் கேட்கனும் எனக்கு அவளை
பிடிச்சுருக்கு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு நாங்க கல்யாணம்
பண்ணிக்கிட்டோம்"

          "பெத்தவங்ககிட்ட சம்மதம் வாங்குறதெல்லாம் அந்த காலம் இது டொண்டி பர்ஸ்டு செஞ்சுரி புரிஞ்சுகோங்க என்றபடி புது மனைவியை அழைத்துச் சென்றான் அருண்.

            சில வருடங்களுக்கு பிறகு சுரேஷ்சும் கவிதாவும் அந்த ஓல்டு ஏஜ்  ஹோமில் சேர்க்கப்பட்டனர் சுரேஷ் அப்பாவை போய் பார்த்தான் அவர் ரொம்ப மெலிந்து காணப்பட்டார் அப்பா.. அப்பா.. மெல்ல அழைத்தான்.

             அவர் தட்டு தடுமாறி கண்ணாடி எடுத்து போட்டப்படி யாரு.. யாரு.. யாரு என்ன கூப்பிட்டது...? நான்தான்ப்பா சுரேஷ் வந்திருக்கேன் நல்லா இருக்குறீங்களாப்பா..."

             "வாப்பா.. சுரேஷ் நல்லா இருக்குறீயா உன்னை கண்ணால பார்க்க முடியலங்குற குறைய தவிர நான் நல்லா இருக்கேன் நீயும் தவறாம பணம் அனுப்புற இல்ல என்னை நல்லா கவனிச்சுகுறாங்கப்பா..." என்றார் சிறு நடுக்கத்தோடு

         "என்னை மன்னிச்சுருங்கப்பா உங்கள சுமையின்னு நினைச்சு எந்த ஹோம்ல விட்டேனோ அதே ஹோம்ல இப்ப நானும் உங்க மருகளும் வந்திருக்கோம் முதுமை என்பது எல்லாருக்கும் வரும்னு நினைக்காம இருந்துட்டோம் நான் செஞ்ச தவறுக்கு கடவுளே எங்களை தண்டிச்சுட்டார் என அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுதான் சுரேஷ்.

                    முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது உண்மை

No comments:

Post a Comment