இந்துமத
உபநிடத நூல்கள் வாழ்க்கை முறையை விஞ்ஞான ரீதியாக நமக்குக் கற்று
கொடுக்கின்றன. பௌதிக பாடத்தில் ஒவ்வொரு துறையைப் பற்றி ஒவ்வொரு விஞ்ஞானி
ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டிருப்பதைப் போல இதிலும் பல்வேறு ஞானிகள்
உண்மைகளைத் தெளிவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் அந்த ஞானிகள் மக்கள்
கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமும் சொல்லியிருக்கின்றனர்.
உபநிடதங்கள் மாய மந்திரத்தின் மூலம் மருந்து கொடுப்பதில்லை. எந்த முனிவரும் தான் சொன்னதை நம்பியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு நிலையிலும் தெரிந்த ஒன்றைச் சொல்ல ஆரம்பித்து பிறகு படிப்படியாகத்தான் தெரியாத ஒன்றுக்குப்போய் விளக்கம் சொல்லியிருக்கின்றனர். கேள்வி கேட்கும் மக்கள் தன்னை எப்படி பக்குவம் படுத்திக்கொள்வது என்பதையும் விளக்கியுள்ளனர்.
மக்களை நல்வழிப்படுத்தும் நூல்கள் உபநிடதங்கள் இதுபோன்ற அரிய நூல்கள் வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்துமத உபநிடத நூல்கள் எண்ணங்கள் வரிசைப்படி கருத்துக்களாக உருவாக்கப்படுகின்றன. பின்னர் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விளக்கத்துடன் விரிவுப்படுத்தப்படுகின்றன.
எங்கேயும் சொன்னதைத் திரும்பச் சொல்வதற்கில்லை சொன்னதை அப்படி ஏற்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துவதுமில்லை. மாணவன் தனது குருவை நாடிச் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக்கொண்டு அறிவை விசாலமாக்கிக் கொள்ளும் முறையிலேயே உபநிடதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆக இன்று இந்து மதத்தைத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்வதற்கு அருமையான கைவிளக்காக உபநிடத நூல்கள் பயன்படுக்கின்றன். இவை ஆன்மிக ஒளிவிளக்கு நூலிருந்து எடுக்கப்பட்டவை.

No comments:
Post a Comment