Thursday, 18 September 2014

கோபுரத்தின் சிறப்பு

            கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆகும். கோயில் சென்று வழிபட முடியாதவர்கள் தூரத்தே நின்று கூட கோபுர வழிபாடு செய்யலாம். இது கர்ப்ப கிரஹத்தில் இருக்கும் இறைவனை வழிபட்டதற்கு சமமாகும். கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும் இறைவனின் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குள் புக வேண்டும். கோயில்கள் நமது உடம்பின் வடிவத்திலேயே அமைக்கப் பட்டுள்ளது இதனை க்ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம் என்பர்.
இதனையே திருமூலர்

                         உள்ளம் பெருங்கோயில் மானுடம்பாலயம்
                         வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
                         தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
                         கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே
                                                                                                       எனக் கூறுகிறார்.
            தினசரி ஆலய தரிசனம் செய்வோர் வாயில் இறைவன் திருநாமம். நெஞ்சில் அந்த இறைவன் நினைவை நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறப்பு. நமது ஆலயங்களில் காணப்படும் அமைதி, மனதிற்குள் ஊடுருவும் தெய்வ சக்தியை வெளிநாட்டவரே வியந்து போற்றுகின்றனர்.

No comments:

Post a Comment